Google Map யின் பயனுள்ள 10 Tips & Tricks

Every one should be know Google Maps Tips and  Tricks

Google Maps Tips and  Tricks



நம்மில் அநேகமானோர் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் போது முதலில் அவர்கள் நினைப்பது Google Map தான். அதன் பயன் மிக அதிகம். நமக்கு தெரியாத இடமாக இருந்தாலும் Google Map யின் உதவியுடன் தைரியமாக எங்கு வேண்டும் என்றாலும் சென்று வர முடியும். 


அவ்வாறு நாம் அடிக்கடி பயன்படுத்தும் Google Map யில் உள்ள சில பயனுள்ள விடயங்கள் பற்றிய விளக்கத்தினை இந்த பதிப்பின் ஊடாக பார்க்கலாம்.

01. Navigation Setting :

அதிகமானவர்கள் தங்களுடைய Google Map யில் தனது முந்தய பயணத்தின் Setting கலை அப்படியே வைத்து இருப்பார்கள். அது புதிதாக ஒரு இடத்தினை தேடும் போது சில தாமதங்கள் குழப்பங்களை விளைவிக்கும்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Google Map யில் உள்ள Profile icon இணை தெரிவு செய்ய வேண்டும்.  பின்னர் Setting சென்று அதிலுள்ள Navigation செல்ல வேண்டு. அதில் கீழே Route Option என்பதனை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான தெரிவுகளை தேர்ந்து எடுக்கவும்,  தேவையற்ற தெரிவுகளை அகற்றவும் முடியும்.

இதன் மூலம் உங்களுக்கு Highway மற்றும் Tolls தேவை எனில் தெரிவு செய்யவும் முடியும். அல்லது அந்த வழிகள் தேவையில்லை எனில் அவற்றினை தெரிவு செய்யாமல் விடவும் முடியும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான பாதையை தெரிவு செய்து இலகுவான பயணத்தை மேற்கொள்ளலாம்.

02. Incognito Mode :

Google Map யில் நீங்கள் முன்னதாக பயணம் செய்த தேடிய தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும். அனால் இந்த Incognito Mode நீங்கள் பயணிக்கும் தகவல்களை பிறர் கண்காணிக்க முடியாதவாறு பாதுகாக்கும்.

அதற்கு நீங்கள் Profile சென்று அதில் உள்ள Incognito Mode இனை ON செய்ய வேண்டும்.


03. Pause location History :

Google Maps ஆனது நீங்கள் பயணம் செய்த இடங்கள் பற்றிய விவரங்களை நீங்கள் அனுமதிக்காத விடத்து  Location History ஆக சேகரிக்காது. அனால் Google Map யில் அதனை நீங்கள் சென்று OFF செய்ய முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை Profile சென்று அதில் Your data in Maps என்பதனை தெரிய வேண்டும். பின்னர் Location History சென்று ON என்று இருக்கும்.அதனை Click செய்வதன் மூலம்  Location History உள்ளே செல்லும். அங்கே Pause என்பதனையும் ON செய்ய வேண்டும். இப்போது நீங்கள் செல்லும் இடங்களை Google Map சேகரிக்காது.

மேலும் கீழே உள்ள Manage Activity என்பதனுள் சென்று அங்கே உள்ள முன்னைய பதிவுகளை அளிக்க முடியும். மேலும் Auto-Delete என்ற Option இணைய தெரிவு செய்வதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்களுடைய பதிவுகள் தானாக அழிக்கப்படும்.

04. Offline Google Map Download :

சில சந்தர்ப்பங்களில் நாம் பயணிக்கும் எல்லா இடங்களிலும் இனைய இணைப்பு இருக்கும் என்பதில் உத்தரவாதம் இல்லை இதனால் நாம் செல்லும் இடங்களை பதிவிறக்கி வைப்பதன் மூலம் இணையம் இல்லாத சந்தர்ப்பங்களில் கூட நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணிக்க முடியும்.

இதற்கு Profile Icon யிற்கு சென்று அதில் Offline Maps என்பதனை தெரிவு செய்ய வேண்டு. அதில் Set your own map என்பதை அதேரிவு செய்து உங்களுக்கு செல்ல வேண்டிய இடத்தினை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் Download என்ற பதிவினை தெரிவு செய்வதன் மூலம் உங்களுடைய Map பதிவிரக்கப்படும். 

இவ்வாறு Offline யில் பயன்படுத்தப்படும் Map 30 நாட்கள் மாத்திரம் சேகரிக்கப்பட்டு இருக்கும். பின்னர் தானாக அழிந்துவிடும். 

05. Plot routes with multiple stops :

இது நீங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு செல்லும் போது இடையில் சில இடங்களுக்கும் நின்று செல்வதற்கு தீர்மானித்து இருப்பீர்கள். அவ்வாறு இடையிடையில் நின்று செல்ல இந்த தெரிவு உதவியாக இருக்கும்.

இதற்கு நீங்கள் Google Map சென்று உங்களுடைய பயணத்திற்கான வழியினை தெரிவு செய்த பின் வலதுபக்க மேல் மூலையில் உள்ள Three Dots தெரிவினை தெரிவு செய்ய வேண்டும். அதில் Add Stop என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும். இதில் நீங்கள் நின்று செல்ல வேண்டிய இடங்களை குறிக்க முடியும்.

06. Set a reminder to leave :

இந்த தெரிவானது நீங்கள் சென்று அடைய வேண்டிய நேரத்தினை உங்களது தூரத்துடன் ஒப்பிட்டு நீங்கள் புறப்பட வேண்டிய சரியான நேரத்தை உங்களுக்கு நியாபகமூட்டும் செயல்பாட்டை செய்கின்றது.

இதற்கு நீங்கள் Three-Dots இணை தெரிவு செய்து வலது பக்க மூலையில் உள்ள Set a reminder to leave என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும். அதில் Depart at மற்றும் Finished என்பவற்றினை தெரிவு செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் புறப்பட வேண்டிய நேரத் தெரிவுகளை உங்களுக்கு அனுப்பும்.

07. Change Vehicle icon :

நீங்கள் பயணத்தினை ஆரம்பிக்கும் போது உங்களது Map யில் அம்புக்குறி போன்ற அடையாளம் இருக்கும். அதனை நீங்கள் வாகனம் போன்ற வடிவில் மாற்றியமைக்க முடியும். இதற்கு நீங்கள் அந்த அம்புக்குறியினை தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கான பல தெரிவுகள் இருக்கும். அதனை தெரிவு செய்து உங்களது icon இனை மாற்றிக்கொள்ள முடியும்.

08. Customize public transit option :

இந்த தெரிவானது நீங்கள் சொந்த வாகனம் இல்லாமல் பொது போக்குவரத்தில் பயணிப்பதற்கு தெரிவினை வழங்கும். இதில் நீங்கள் புகையிரத அடையாளம் போன்று கீழே காட்டும் icon இணை தெரிவு செய்வதன் மூலம் பொதுபோக்குவரத்து சேவைகள் நீங்கள் செல்வதற்கு எந்த எந்த நேரங்களில் உள்ளது என்ற தெளிவான விவரத்தை உங்களுக்கு வழங்கும்.

09. Find Vaccination center :

Covid காலங்களில் மிகவும் பயனுள்ள ஒரு தெரிவுதான் இது. நீங்கள் Google Map Search Bar யில் Vaccine center near me என Type செய்தல் உங்களுக்கு அருகில் உள்ள Center களை அது காட்டும். இதன் மூலம் நீங்கள் முன் பதிவு செய்ய வேண்டி இருப்பின் அந்த விவரங்களை உங்களுக்கு காண்பித்து அதற்கான நினைவூட்டளினையும் வழங்கும்.

 10. Share your real time location :

இது நீங்கள் பயணிக்கும் வரைபடத்தினை நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ள முடியும். இது நீங்கள் சரியாக எங்கே உள்ளீர்கள் என்பதை சரியான அளவீட்டுடன் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் Profile icon யில் Location Sharing என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.  அதில் Share Location என்பதை தெரிவு செய்து For 1 Hour என்பதில் தேவையான நேரத்தை தெரிவு செய்யலாம். இதில் எவ்வள நேரம் வரை நண்பர்களுடன் பகிர வேண்டும் என்பதை குறிக்கும்.


ஏனைய Trips & Tricks பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும்.

நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL

Post a Comment

Previous Post Next Post