அண்மையில் Microsoft நிறுவனம் தனது புதிய இயங்குதளமான Windows 11 இணை அறிமுகம் செய்து இருந்தது. அதோடு Windows 11 பயனாளர்களின் கணனிக்கு பொருத்தமானதா என்பதை கண்டறிய Pc Health Check என்ற ஒரு மென்பொருளையும் அறிமுகப்படுத்தி இருந்தது.
அந்த மென்பொருள் பலரது கணனிக்கு Windows 11 இயங்கும் தகுதி இருப்பினும் தகுதியற்றதாகவே காண்பித்தது. இதனால் மக்கள் அதிகம் குழப்பமடைந்தனர். இதனால் Microsoft நிறுவனம் அந்த மென்பொருளினை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டது.
முக்கியமாக உங்களுடைய கணணி குறைந்தது 4GB RAM மற்றும் 64GB இடவசதியுடன் காணப்பட வேண்டும். அதோடு கணனியின் குறைந்த பட்ச வேகம் 1GHz மற்றும் 2-core Processor உம் காணப்பட வேண்டும்.
அனால் இந்த தகமையை பூர்த்தி செய்த கணனிகளால் Windows 11 இணை upgrade செய்ய முடியாத நிலைமை உருவாக்கி உள்ளது.
மக்கள் குழப்பமடைய பிரதான காரணம் Windows 10 உரிமையாளர்கள் இலவசமாக Windows 11 இணை upgrade செய்ய முடியும் என Microsoft நிறுவனம் அறிவித்து இருந்தமையே ஆகும்.
இதனால் Windows 10 உரிமையாளர்கள் தங்களால் Windows 11 இணை upgrade செய்ய முடியாமல் போய்விடும் என்ற ஏமாற்றத்தில் குழப்பமடைந்துள்ளனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
Tags:
Tech News