பதிவு செய்யப்படாத VPN சேவையை வழங்கும் இணையதள சேவைகளில் உள்ள தரவுகளை திருடப்பட்ட தாகவும் அவ்வாறான தரவுகளை இணையத்தளங்களில் விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
அந்த வகையில் அனைத்து விதமான VPN சேவைகளும் செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாத VPN சேவையை வழங்கும் LIME VPN நிறுவனத்தின் இணையத்தளமே Hack செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த VPN யினைப் பயன்படுத்தும் சுமார் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனியுரிமை மையப்படுத்தப்பட்ட மறுஆய்வு தளமான Privacy Sharks குறிப்பிடுகின்றது.
மேலும் Privacy Sharks இது தொடர்பில் நடத்திய ஆய்வில் வழங்குனர் வலைத்தளத்திலிருந்து Encrypt செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் WHMCS Billing System இருந்து பயனாளர் பெயர், email, Password திருடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Hackers , Privacy Sharks க்கு குறிப்பிடுகின்ற போது Lime VPN பயன்படுத்தும் பாவனையாளர்களின் Encrypt செய்யப்பட்ட தரவுகளின் Key யினை தாங்கள் பெற்றுள்ளதாகவும் அதனை பயன்படுத்தி பாவனையாளர்களின் Encrypt செய்யப்பட்ட தரவுகளை Decrypt செய்து பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் Raidfourmsல் Lime VPN ல் திருடப்பட்ட தகவல்களை 400$ பெறுமதியான Bitcoin க்கு விற்பனை செய்வதற்கு விளம்பரப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH TAMIL