What is the SAR Value ? Why is it important to Smart Phone
நீங்கள் Smart Phone களை கொள்வனவு செய்யும் போது அந்த பேட்டின் பின்பக்கத்தில் சில SAR Value (Specific Absorption Rate) குறிப்புகள் காணப்படும். இது ஒவ்வொரு Smart Phoneகளுக்கும் வேறுபடும். இந்த குறிப்பு எதற்கு என்று நம்மில் பலருக்கு தெரியாது.
கண்டிப்பாக நாம் ஒரு தொலைபேசியை கொள்வனவு செயும் பொது இதனை கவனத்தில் கொண்டு கொள்வனவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
SAR Value என்பது கையடக்க தொலைபேசியில் இருந்து வரும் கதிர் வீச்சு ஆகும். அந்த கதிர்வீச்சின் அளவினை குறிப்பிடும் அளவீடுகளே அந்த குறிப்புக்கலாகும்.
இந்த SAR Value ஆனது தலைப்பகுதிக்கு வேற அளவிலும் உடல் பகுதிக்கு வேற அளவிலும் காணப்படும். இந்த கணிப்பீடு அமெரிக்க நாடுகளுக்கு வேறாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேற முறையிலும் கணிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளுக்கு 2W/Kg ற்கு குறைவாகவும் வகையிலும் அமெரிக்க நாடுகளுக்கு 1.6W/Kg ற்கு குறைவாகவும் என்ற அளவீடுகளிலும் காணப்பட வேண்டும்.
SAR என்றால் என்ன ?
ரேடியோ அதிர்வென்னானது (Radio Frequency) மின்காந்தப் புலத்திற்கு (Electromagnetic Field) வெளிப்படும் போது மனித உடல் அதனை ஒரு அழகிற்கு எவ்வளவு உறிஞ்சுகின்றது என்பதனை கணிப்பிடும் அளவீடு SAR ஆகும்.
இது ஒரு கிலோகிராம் இற்கு எவ்வளவு உறிஞ்சப்படுகின்றது (W/Kg) என்பதன் அளவீடு ஆகும்.
SAR கணிப்பிடப்படும் முறை
Mobile Phone SAR Value கணிப்பீடு
SAR Value ஆனது தலைக்கு வேறாகவும் உடலுக்கு வேறாகவும் கணிக்கப்படுகின்றது. SAR Value தலைக்கு கணிப்பிடப்படும் போது தொலைபேசியனது தலைக்கு அருகாமையில் பேசும் போது வைக்கும் வகையில் வைக்கப்படுகின்றது. இது SAR Phantom என அழைக்கப்படுகின்றது.
தொலைபேசியின் அன்டெனா தலையுடன் நெருகமக்கப்பட்டு வெவ்வேறு கோணங்களில் வைத்து அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் சாதனம் பரிமாற்றும் அதிர்வெண் அளவீடுகளும் கணிக்கப்படுகின்றன.
இவ்வாறே உடலுக்கு SAR Value கணிக்கப்படுகின்றது. இதனால் சாதனங்களால் வெளியேற்றப்படும் ரேடியோ கதிர்வீச்சின் அளவும் ஒப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கணிக்கப்படுகின்ற SAR Value களின் அளவீடுகளை அரசாங்கங்கள் வரையறுத்துள்ளன. இதற்கு ஏற்ற வகையிலே தொலைபேசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
குறிப்பு :
சாதரணமாக சுற்றுசூழலின் தன்மைக்கு ஏற்ப பொதுமக்களின் மொத்த உடம்பில் SAR சராசரி அளவு 0.08W/Kg ஆகும். இதனால் SAR Value யின் வரம்பு 0.4W/Kg என்ற அளவில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL