பல சாதனங்களில் ஒரு WhatsApp Account பயன்படுத்தும் வசதி.

 

whatsapp multi device support update, update date, release date, apk, multiple device, WhatsApp Multi-Device Support Starts Rolling Out for Beta Testers, Works Even When Your Phone Is Inactive
நாம் சாதரணமாக ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் மாத்திரமே ஒரு WhatsApp கணக்கினை பயன்படுத்த முடியும். நீங்கள் WhatsApp Web இணை பயன்படுத்தி கணனியில் இணைந்து இருந்தால் கூட உங்கள் Smart Phone யில் WhatsApp இணைப்பில் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.


ஆனால் இப்போது பலசாதனங்களில் WhatsApp இணை இணைத்து பயன்படுத்தும் Beta பதிப்பானது சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 


அதாவது நீங்கள் உங்களுடைய Smart Phone இணை பயன்படுத்தி Desktop, Laptop, Tablet என பல சாதனங்களில் WhatsApp Web ஊடக இணைத்து பயன்படுத்த முடியும்.

மேலும் அப்படி பயன்படுத்தும் பொது உங்களுடைய Smart Phone இணைப்பில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.


இந்த பயன்பாட்டின் மூலம் உங்களுடைய தொலைபேசி இல்லாமலே உங்களுடைய கணணியிலோ Tablet யிலோ WhatsApp இணை இலகுவாக பயன்படுத்த முடியலாம். உங்கள் தொலைபேசியில் ஏதும் பிரச்சினை காரணமாக பயன்படுத்த முடியாத பல சந்தர்பங்களில் இது பெரும் உதவியாக இருக்கும்.


2019 ஜூலை மாதத்தில் இருந்து இதற்கான சோதனைகள் நடைபெற்று வந்தாலும் இப்போது தான் இதற்கான Beta பதிப்பு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு பயன்படுத்துவதால் பல பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். அதனை கருத்தில் கொண்டு பல விடயங்களை இதில் உள்வாங்கியுள்ளது WhatsApp நிறுவனம்.


இதனால் பயனாளர்களின் பெயர், தொடர்புகள், Message History, Starred Message போன்ற விடயங்களை Encrypt செய்து பயன்படுத்தும் புதிய வகை தொழில்நுட்பங்களை இந்த Beta பதிப்பில் உள்வாங்கி சோதனையில் ஈடுபடுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH - TAMILPost a Comment

Previous Post Next Post