Xiaomi overtakes Apple to become the world’s second largest smartphone company
சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே பல போட்டிகள் இருந்த வண்ணமே இருந்த்தது.
இதில் முதல் இரண்டு இடங்களும் Apple மற்றும் Samsung நிறுவனங்களுக்கு இடையே மாறி மாறி இருந்து வந்தது. ஆனால் இப்பொது முதல் முறையாக Xiaomi நிறுவனம் Apple இனை பின் தள்ளிவிட்டு 2 ஆம் இடத்தினை பிடித்துள்ளது.
இந்த வருட நடுக்காலபப்பகுதியில் Xiaomi நிறுவனம் 83% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி எதிர்கால சந்தையை Xiaomi நிறுவனம் கைக்குள் கொள்ளும் இயல்பை வெளிப்படுத்துகின்றது. .
இந்த வருட நடுக்காலப்பகுதியில் மொத்த ஸ்மார்ட் போன் சந்தையில் 19% இனை Samsung நிறுவனமும், 17% இனை Xiaomi நிறுவனமும், 14% இனை Apple நிறுவனமும் கொண்டுள்ளது. Oppo மற்றும் Vivo நிறுவனங்கள் 10% பங்களிப்புடன் 4ஆம், 5ஆம் இடத்தில் உள்ளன.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL