போலியான தொலைபேசி இலக்கத்தை இலவசமாக பெறுவது எப்படி ?

How to make a Fake Phone number for freeHow to make a Fake Phone number for free, How to get the fake telephone numbers, What can you do with fake cell phone numbers, Can you paid for this service, Can you submit any documents for fake telephone numbers


நாம் பல சந்தர்ப்பங்களில் நமது தொலைபேசி இலக்கங்களை பிற தேவைக்கு பயன்படுத்துவதற்கு விரும்புவதில்லை. அதிலும் நாம் ஏதேனும் ஒரு இணையத்தளதினுள் பிரவேசிக்கும் போது கட்டாயம் தொலைபேசி இலக்கத்தை உள்ளீடு செய்ய வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. 


அந்த சந்தர்ப்பங்களில் எமக்கு பயன்படுத்த பிற தொலைபேசி இலக்கம் ஒன்றிற்கான தேவைப்பாடு எழுகின்றது. இந்த நேரத்தில் நமக்கு கைகொடுப்பதே இந்த போலியான தொலைபேசி இலக்கங்கள் ஆகும். இவற்றினை கொண்டு நமது தொலைபேசி இலக்கத்திற்கு பதிலாக இந்த இலக்கங்களை பயன்படுத்த முடியும்.

போலியான தொலைபேசி இலக்கமா ? அப்படி என்றால் என்ன ? அதனை எங்கே பெறுவது ? அதனை பெற கட்டணம் செலுத்த வேண்டுமா ? அதனை பெற எமது ID ஆதாரங்களை வழங்க வேண்டுமா ? அதனை கொண்டு என்ன செய்ய முடியும் ? 

என்ற பல கேள்விகள் எமக்கு மனதில் தோன்றும் அதற்கான விளக்கத்தினை இதில் பார்க்கலாம்.


போலியான தொலைபேசி இலக்கம் என்றால் இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சேவையாகும். இது நமக்கு சாதாரண தொலைபேசி இலக்கங்களை கொண்டு நம்மால் என்ன என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் இதனால் செய்ய முடியும். 

 How to get the fake telephone numbers | எவ்வாறு போலியான தொலைபேசி இலக்கத்தை பெறுவது ?

இந்த சேவையினை வழங்க பல நிறுவனங்கள் இணையத்தளத்தில் உள்ளன. நீங்கள் இணையத்தில் "Free fake telephone numbers" என தேடும் போது பல தெரிவுகள் நமக்கு கிடைக்கின்றது அவற்றில் சிலவற்றை கீழே தருகின்றோம்.


What can you do with fake cell phone numbers | போலியான தொலைபேசி இலக்கத்தை கொண்டு என்ன செய்ய முடியும் ?

இதனால் சூழ் நிலைக்கு ஏற்றல் போல பல தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். சாதாரண தொலைபேசி இலக்கத்தை கொண்டு என்ன எல்லாம் உங்களால் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் இதனை கொண்டு செய்ய முடியும். 

அதாவது நீங்கள் ஒருவருக்கு ஒரு செய்தியினை யார் அனுப்பியது என்று தெரியாமல் அனுப்புவதற்கு இந்த சேவையினை பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் நீங்கள் ஒரு Chatting App இணை பயன்படுத்த தொலைபேசி இலக்கம் கேட்கும் அதற்கான OTP இணையும் அந்த இலக்கத்திற்கு அனுப்பும் அந்த சந்தர்ப்பங்களில் இவை நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் ஒருவருக்கு தொலைபேசி இலக்கத்தினை தெரிவிக்காமல் தொடர்பு கொள்ள இந்த போலியான இலக்கம் எமக்கு உதவும். நீங்கள் யார் என்று தெரியாமலேயே உங்கள் நண்பர்களை ஏமாற்ற முடியும்.


Can you paid for this service | இந்த இலக்கத்தினை பெற பணம் செலுத்த வேண்டுமா ?

சில இணையத்தளங்கள் இந்த சேவையினை பணம் செலுத்தியே வழங்குகின்றன. சில சேவை வழங்குனர்கள் இலவசமாக போலி இலக்கத்தை வழங்கி விட்டு அவற்றில் சில சேவைகளை எமக்கு வழங்காமல் அந்த சேவைகளை வழங்க பணம் கோரும். 

இவ்வாறு சேவைகளுக்கு ஏற்றல் போல் பணம் வசூலிக்கும் நிறுவனங்களும் உள்ளன. சில வேலைகளில் முழு சேவையினையும் இலவசமாக வழங்கும் நிறுவனங்களும் இணையத்தில் உள்ளன.

Can you submit any documents for fake telephone numbers | இதனை பெற ஏதேனும்  ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா ?

இவற்றினை பெற எந்த சிரமமும் இல்லை. குறிப்பிட்ட சேவையினை வழங்கும் நிறுவனத்தின் இணையத்தளத்தினுள் சென்று அங்கே ஒரு கணக்கினை உருவாக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு தேவையான இலக்கத்தினை தெரிவு செய்து பின்னர் முழுமையான சேவையினை பயன்படுத்த முடியும்.


நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL 

2 Comments

Previous Post Next Post