Cyber Criminals used a new way to evade capture
Follow the money என்ற மந்திர வார்த்தையை பயன்படுத்தும் Cyber Criminals
Cyber உலகில் இந்த குற்றவாளிகளுக்கும் அதனை பிடிப்பதற்கு துரத்தும் அதிகாரிகளுக்கும் இடையில் காலம் காலமாக இந்த போர் நடைபெற்றே வருகின்றது. அதில் புத்திசாலியான குற்றவாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர் அவர்களை பிடிக்கு திறமையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இவ்வாறு Cyber Criminals தாங்கள் கொள்ளை வேட்டையை Cryptocurrency யை பயன்படுத்தியே மேற்கொண்டு வந்தனர். அனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான குற்றவாளிகள் பிடிபட்டனர். அதற்கு Cryptocurrency Blockchain யில் நிதி பரிவர்த்தன தொடர்பில் காணப்பட்ட சில தொழில்நுட்பங்களே உதவி புரிந்தது. இதில் அதிகாரிகளின் திறமையான செயல்பாடு வெளிப்பட்டது.
அனால் Cyber Criminal களும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் Darknet யில் புதிய சேவையினை தொடக்கி உள்ளனர். இதன் மூலம் பரிவர்த்தனையாகும் இலத்திரனியல் நாணயங்கள் எவ்வளவு சுத்தமானவை என்பதை கண்டறிய முடியும் என கூறுகின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகளில் ஒருவரான பிரதான விஞ்ஞானி மற்றும் Elliptic பகுப்பாய்வு இணையத்தளத்தின் இயக்குனருமான Dr. Tom Robbinson குறிப்பிடும் போது Cryptocurrency Blockchain பரிவர்த்தனைகளின் பகுப்பாய்வுக்கு எதிராக Cyber Criminals இயங்க தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயல்பாடு Antinalysis என்று அழைக்கப்படுகின்றது. அதாவது Cyber Criminals தங்களுடைய சொந்த Bitcoins Wallets இணை சரிபார்த்து அதில் ஏதாவது குற்ற செயலுடன் தொடர்புடைய விடயங்களில் அதிகாரிகளின் தொடர்பு உள்ளதா என்பதை பார்க்க முடிகின்றது.
Elliptic இது தொடர்பில் கூறுகையில் Cyber Crime Network அதி நவீனமாகின்றது, Cyber குற்றவாளிகளை பிடிப்பதில் பாரிய சவால் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளது.
Cryptocurrency Tracking யில் பல உயர்மட்ட கைதுகளும் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களின் Hack செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் Mastermind ஆக இருந்த அமெரிக்க நாட்டை சேர்ந்த Graham Ivan Clark கைது செய்யப்பட்டு இப்பொழுது சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]() |
Graham Ivan Clark |