இணையத்தின் மூலம் பிறப்பு, திருமணம், மற்றும் இறப்பு சான்றிதல்களை பெறுவது எப்படி ?

How to apply birth certificate, marriage certificate and death certificate ?

How to apply birth certificate, marriage certificate and death certificate ?

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக அவசரகால நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் தமது அத்தியவசிய சான்றிதல்களை காரியாலயங்களில் சென்று பெறுவதற்கு மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.


இவ்வாறன சூழலை சமாளிப்பதற்காக இலங்கை பதிவாளர் திணைக்களம் புதிய இணையத்தின் ஊடான முறைமையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு நீங்கள் கீழே உள்ள இணையத்தில் பிரவேசித்து இந்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சேவை 4ஆம் திகதி ஆகஸ்ட் மதம் முதல் செயல்பட ஆரம்பித்துள்ளது.

Apply Here

https://online.ebmd.rgd.gov.lk
இந்த சேவையை பயன்படுத்த இலகுவான பயன்பாட்டை விளக்கும் ஒரு கையேட்டினையும் (User Manual)  வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டதை போன்று படிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க முடியும்.


இதன் மூலம் விண்ணப்பிக்கும் சான்றிதல்களுக்கான நகல் வடிவத்தை கணணி மூலமோ அல்லது கையடக்க தொலைபேசி மூலமோ பெற்றுக்கொள்ள முடியும்.


இதில் விண்ணப்பிக்கும் முறை


Step 1 :
மேலே குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தினுள் பிரவேசித்து உங்களது மொழியினை தெரிவு செய்ய வேண்டும்.
Step 2 :
பின்னர் ஒரு புதிய முகப்பு தோன்றும். அதில் கோரப்பட்டுள்ள சில விபரங்களை பூரணப்படுத்த வேண்டும். பின்னர் அதில் பதிவு செய்த உங்களுடைய தொலைபேசிக்கு OTP வரும். அதனை கொடுத்து உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ள  வேண்டும்.Step 3 :
பின்னர் அணைத்து விடயங்களையும் பதிவிட்ட பின் அதற்கான பணத்தினை கோரும். இது பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் சேவை என்பதால் வங்கி VISA மற்றும் MASTER Card மூலம் பணம் செலுத்த முடியும்.


நீங்கள் உங்களுடைய சான்றிதல்களை இணையத்தின் மூலம் நகலினை பெற்றுக் கொள்ள முடியும். பின்னர் Original சான்றிதழினை பதிவுத் தபால் மூலம் பதிவாளர் திணைக்களத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.


 

நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL

Post a Comment

Previous Post Next Post