The Story of Google | கூகிள் உருவான கதை

History of the Google in Tamil 

What is Google ? , History of the Google in Tamil , The Story of Google, Larry Page, Sergey Brin. Googol, Sundar Pichchai



"Google" இந்த வார்த்தையை கேள்விப்படாத யாருமே இந்த உலகில் இருக்க முடியாது. இந்த மந்திர சொல் மனித மூளைக்கே சவால்விடும் வகையில் உருப்பெற்று காணப்படுகின்றது என்று குறிப்பிட்டால் மிகையாகாது. இன்று இந்தப்பதிவில் Google எவ்வாறு உருவானது என்று ஒரு குட்டிக்கதையை பற்றி விரிவாக பார்க்கலாம் பார்க்கலாம்.

Google உருவாக அடிப்படையாக இருந்தவர்கள் Larry Page மற்றும் Sergey Brin உம் ஆகும் எவர்கள் இருவரினதும் விட முயற்சியே இன்று Google யின் இந்த அபார வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்தது.

Who is the Larry Page ? யார் இந்த லார்ரி பேஜ் ?

larry page in bigbittechtamil.com
Larry Page 1973 மார்ச் 26 யில் பிறந்தார். இவரது தந்தை Carl Victor Page ஆகும். இவர் Michigan பல்கலைகழகத்தில் கணனி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் Michigan மாநில பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவரது தாய் Gloria ஆகும். இவர் Lyman Briggs Collage யில் Computer Programming பயிற்றுவிப்பளராக இருந்தார். 


தனது தந்தையும் கணனி துறையில் வல்லுநர், தாயும் சிறந்த Computer Programmer என்பதால் சிறுவயதில் இருந்தே Larry Page இக்கு கணனி துறையில் பாரிய ஈடுபாடு இருந்தே வந்ததது. வீடு முழுவதும் கணனி சார்ந்த புத்தகங்கள், சாதனங்களுக்கு மத்தியிலேயே Larry Page வளர்ந்து வந்தார்.


தனது ஆறாவது வயதிலேயே தனது பாடசாலை படிப்புகளை Word Preocessor யில் செய்யும் மாணவராக இருந்தார் Larry Page. அந்த அளவுக்கு இவரது கணனி அறிவு மட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது.


தனது 12 ஆவது வயதில் Nikola Tesla யின் வாழ்க்கை வரலாற்றை படித்தார் Lorry Page அவரது கண்டுபிடிப்புக்கள் இவரை வியல்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து படித்த அவர் Nikola Tesla தனது கண்டுபிடிப்புக்களை உலகிற்கு சந்தைப்படுத்தும் உக்தியை அறியாமையினால் தனது கண்டுபிடிப்புக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தாமலே இறுதி தருவாயில் கடனாளியாக உயர் இழந்தார் என்ற செய்தியை படித்ததும் கதறி அழுதார் Larry Page. இந்த படிப்பினையே பின்னாளில் Larry Page இக்கு Google உருவாகதிற்கு அடிப்படையாக இருந்தது.

Who is the Sergey Brin ? யார் இந்த சேர்ஜி ப்ரின் ?

Sergey Brin 1973 ஆகஸ்ட் 21 யில் ரஷ்யா நாட்டில் உள்ள மொஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை Eugenia Brin ஆகும். இவர் ஓய்வு பெற்ற கணிதவியல் பேராசிரியர் ஆகும் இவரது தாய் Mikhail ஆகும் இவர் NASA யின் Goddard Space Light Center யில் ஆராய்ச்சியாளராக இருந்தார்.


மூன்று அறைகளை கொண்ட அடுக்கு மாடியில் வசித்து வந்தனர் Brin குடும்பத்தினர். Poland இக்கு கணனி மாநாட்டிற்கு சென்று திரும்பிய Brin தந்தை தம் குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டு என்று கூறி அதற்கான வேளைகளில் ஈடுபட்டார். இதனால் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அனுமது கிடைக்கும் வரை தற்காலிக தொழிலில் ஈடுபட்டார். பின்னர் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைத்து தனது பிள்ளை மனைவியுடன் புறப்பட்டார்.


பின்னர் Brin யின் குடும்பம் பரிசில் குடியேறியது. அங்கே Brin இன் தாய்க்கு Maryland பல்கலைகழகத்தில் கற்பிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில் Hebrew Immigrant Aid Socity யின் உதவியுடன் அமெரிக்காவில் குடியே வைப்பு கிடைத்தது. 1979 October 25யில் குடும்பத்துடன் குடி பெயர்ந்தனர்.

தனது பட்டப்படிப்பை Sergey Brin அமெரிக்காவில் உள்ள Stanford பல்கலைகழகத்தில் தொடர்ந்தார். பின்னர் 2008 யில் தனது PhD இணையும் அதே பல்கலைகழகத்தில் முடித்துகொண்டார்.

Google உருவான கதை | The Story of Google  


ஆரம்பத்தில் இணையம் யார் வேண்டுமானாலும் மேம்படுத்தக்கூடிய தகவல் மையமாக இருந்தது. யார் வேண்டுமானாலும் தகவல்களை தேடி எடுக்ககூடிய விதமாகவும் இணையம் வடிவமைக்கப்பட்டு 1991 யில் செயல்படத் தொடங்கி இருந்தது.


இந்த நேரத்தில் கணனி பட்டப்படிப்பிற்கா Larry Page மற்றும் Sergey Brin ஆகியோர் பட்டப்படிப்பிற்காக Stanford பல்கலைகலகத்தில் சேர்ந்து இருந்தனர்.  ஆரம்பத்தில் Larry இற்கும் Brin யிற்கும் சண்டை சச்சரவு என்று காலம் ஓடிக்கொண்டு இருந்தது.


அப்போது Larry Page "The Anatomy of a Large Scale Hyper textual Web Search Engine"  என்ற தலைப்பில் தனது ஆய்வினை மேற்கொண்டு இருந்தார். இந்த ஆய்விற்கு "BackRub" என்று பெயரிட்டு இருந்தார் Larry Page. அதற்காக Crawler என்ற Program இணையும் எழுதினார் Larry.  அனால் அதில் ஒரு சிக்கல் தோன்றியது அப்போது Larry இற்கு உதவ முன்வந்தவர்தான் Sergey Brin. 


இதன் மூலம் இவர்களது திட்டமாக செறிவான இணைய பக்கங்களை முதலிலும் தகவல் செறிவு குறைவான இணையபக்கங்களை முன்னாலும் காண்பிப்பதற்கான வேலையில் இருவரும் ஈடுபட்டு இருந்தனர். இதன் மூலம் Larry Page பல கோடி இணைய பக்கங்களை Page Track சூத்திரம் மூலம் தரவரிசைப்படுத்தும் நுட்பத்தை உருவாகினர். Sergey Brin ஒவ்வொரு இணையதளத்தின் பக்கங்களையும் ஆராய்ந்து தரம்பிற்கும் Algorithm இணைய உருவாகினார்.


இவ்வாறு இவர்களது கூட்டனி வெற்றி பெற இருவரும் சேர்ந்து BackRub இற்கு வடிவத்தினை வழங்கினர். எவர்கள் உருவாகிய இணையதளம் Stanford பலகலை கழகத்தில் தேடுபோரியாக பொறியாக இருந்தது. இது google.stanford.edu என்று வடிவம் பெற்று இருந்தது.


What is Google ? , History of the Google in Tamil , The Story of Google, BackRub



இந்த காலப்பகுதியில் Yahoo ஒரு தேடுபொறியாக பிரபல்யமாக இருந்தது. இருந்தாலும் Larry Page இற்கு சிறந்த வினைதிறன் மிக்க தேடல்களை தரக்கூடிய தேடுபொறியினை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. 


இதன் விளைவாக Larry Page மற்றும் Sergey Brin இருவரும் சேர்ந்து ஒரு தேடு பொறியினை உருவாகினார்கள். இப்போது இருவரும் உருவாக்கும் தேடுபொறிக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்துக்கொண்டு இருக்கும் போது GOOGOL என பெயர் வைக்கலாம் என்று தீர்மானித்தனர். இதன் அர்த்தம் 1 உடன் நூறு பூச்சியங்கள் பின்னல் சேர்த்து வருவதற்கு பெயர்தான் அது.

What is Google ? , History of the Google in Tamil , The Story of Google
GOOGOL


அனால் அந்தப் பெயர் ஏற்கனவே  பொறியியலாளர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அனால் அவர் அந்த பெயரினை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அனால் அந்த பெயரில் Larry Page இற்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. அந்த நேரத்தில் தவறான எழுத்துக்களை உள்ளிட்டதால் பிறந்ததுவே இந்த GOOGLE ஆகும்.


Yahoo

ஒரு வழியாக இந்த Google இணையத்தளம் உருவான பின்னர் அந்த இணையதளத்தினை Yahoo போன்ற பெரிய நிறுவனதிற்கு விற்க வேண்டு என்பதே இவர்களது முடிவாக இருந்தது. இதனால் 1998 யில் Google $1 Million இற்கு Yahoo விடம் விலைபேசியது. அனால் Yahoo அதனை வாங்க மறுத்துவிட்டது. பின்னர் 2002 யில் Yahoo $3 Million இற்கு Google இடம் விலைபேசியது அனால் Larry உம் Brin உம் $5 Billion இற்கு குறைவாக கொடுக்க விரும்பவில்லை.


பின்னர் Google இணையதளத்தினை தாமே நடாத்த தீர்மானித்தனர் Larry மற்றும் Brin. இதனால் தாங்கள் Pizza Delivery செய்து சம்பாதித்த பணத்தில் கணனிகளை வாங்கி தங்களுடைய விடுதி அறையில் முதல் கட்ட பணியினை தொடங்கினர். 


பின்னர் தனது நண்பர்களில் ஒருவரின் வீட்டில் வாகன தரிப்பிடத்தில் தனது உத்தியோக பூர்வ பணியை 6 பணியாளர்களுடன் தொடங்கினர். இந்த நிருவனதிற்கு Founder ஆக Larry Page உம் Co-Founder ஆக Sergey Brin உம் இருந்தனர். Google யின் முதல் பணியாளர் Crake. 1998 செப்டம்பர் யில் Google ஆரம்பிக்கப்பட்டது.


Google ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக பத்தாயிரம் தேடல்களை செய்தது. மேலும் அந்த நாட்டின் சிறந்த 100 இணையத்தளங்கள் பட்டியலில் Google உம் இடம்பிடித்து இருந்தது. இவ்வாறு படிப்படியாக வளர்ந்த Google நிறுவனம் தனது காரியாலயத்தை Silicon Valley இற்கு மாற்றியது. 


Google ஆரம்பித்து சரியாக 1 வருடத்தில் 3.5 மில்லியன் தேடல்களுக்கு பதிலளித்து இருந்தது. பின்னர் அதிகமான வேலைகள் காரணமாக Silicon Valley யில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இயங்கிய Google நிறுவனம் பாரிய கட்டிட தொகுதிற்கு வாடகைக்கு இடம்பெயர்ந்தது. இன்றுவரை அதே இடத்திலேயே இயங்கி வரும் Google பின்னர் அந்த கட்டட தொகுதியினை $319 Million இற்கு வாங்கிகொண்டது .


பின்னர் தொடர்ந்து Google இயங்குவதற்கு இந்த பணம் போதாது என உணர்ந்த Larry Google தேடலுடன் அது சம்பந்தப்பட்ட விளம்பரங்களையும் சேர்த்து பார்வையாளர்களுக்கு காண்பிக்க முடியும் இதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என தீர்மானித்தனர். இதற்கு Larry Page இக்கு Nikola Tesla யின் வாழ்க்கை படிப்பினை ஒரு காரணமாக இருந்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டில் இருந்து விளம்பரங்களை காண்பிக்க தொடங்கியது Google. 


இவ்வாறு யாருமே எதிர்பார்க்க முடியாத பாரிய வளர்ச்சியை கண்டது Google நிறுவனம். பின்னர் பங்குச்சந்தையில் களம் இறங்கிய Google நிறுவனம் அதன் பங்குகள் உயர்ந்த பெறுமதியை அடைந்து Yahoo வுடன் நேரடி போட்டியாளராக மாறியது.


இத்தனை வளர்சிக்கும் அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் ஒத்துழைப்பு பாரிய பங்களிப்பினை வழங்கியது. Google நிறுவனம் தனது நிறுவனத்தின் பணியாளர்களை உலகளவில் இருந்து தேடிப்பொருக்கி எடுத்தது. அப்படி கண்டெடுத்த பணியாளர்களுக்கு பாரிய சலுகளைகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தியது. அந்த தந்திரமே பணியாளர்களை அர்ப்பணிப்புடன் Google இற்கு பணிபுரிய வழிவகுத்தது. 

What is Google ? , History of the Google in Tamil , The Story of Google


Google நிறுவனம் தேடு பொறியுடன் மாத்திரம் நிறுத்தி விடாமல் தற்போது வரை 271 இற்கு மேற்பட்ட Google சேவைகளை மற்றும் பொருட்களை வழங்கி வருகின்றது. பின்னர் பல நிறுவனங்களையும் விலைகொடுத்து வாங்கியது Google நிறுவனம். அவற்றில் ஒன்றே YouTube ஆகும். YouTube இணை 1.65 பில்லியன் டொலரிற்கு வாங்கியது Google நிறுவனம்.


இவ்வாறு பல வெற்றிகளை கண்டு இருந்தாலும் Google யின் 90 யிற்கு மேற்பட்ட பல வேவைகள் தோல்விகளை தழுவி கைவிடப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்த்தக்கது. பின்னர் மக்களின் வரவேற்பினால் Oxford பல்கலைகலத்தின் அகராதியில் Google என்ற சொல் இடம்பெற்று இருந்தது. அதற்கு "Google தேடுபொறியை பயன்படுத்தி Google யில் தகவல்களை பெறுதல்" என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.


பின்னர் இந்த Google நிறுவனத்தை நம்பிக்கையான திறமையான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்த Larry Page அதனை Google Chorme யில் மேம்படுத்தல் தலைவராக இருந்த இந்திய நாட்டைசேர்ந்த Sunder Pichchai இடம் ஒப்படைத்தனர். அவரை Google யின் C.E.O ஆக மாற்றிவிட்டனர். பின்னர் Larry Page உம் Sergey Brin உம் Alphapet Inc இற்கு தலைமை அதிகாரிகளாக மாறினார்.


இந்த பதிவானது Google பற்றிய ஒரு பூரண அறிவினை வழங்கி இருக்கும் என நம்புகின்றோம். இது போன்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட வரலாறுகளை அறிந்துகொள்ள கீழே உள்ள Link இணை Click செய்யவும்





  



Post a Comment

Previous Post Next Post