How to hide an App on Android Device
Android சாதனத்தில் Apps களை மறைத்து வைப்பதற்கான வசதி ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் Android சாதனத்தில் பலதரப்பட்ட App களை வைத்து இருப்போம். அவற்றில் சில நமது தனிப்பட்ட பாவனைக்காக வைத்து இருப்போம் அப்போது எமது Android சாதனத்தை பிறர் ஒருவரிடம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது சங்கடம் ஏற்படும்.
அல்லது தமது குழந்தைகளுக்கு Online Class அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் Android சாதனத்தை கொடுக்க நேரிடும் போது குறிப்பிட்ட சில App களை பயன்படுத்த கொடுக்க விரும்ப மாட்டோம். அந்த நேரங்களில் என்ன செய்வதென்றே புரியாது.
அவ்வகையான சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்ட App களை மறைத்து கொடுக்க தெரியாமல் அதனை Uninstall செய்து கொடுப்போம். அல்லது இதற்காக வடிவமைக்கப்பட்ட பிற Android App களை இதற்காகவே நாம் பயன்படுத்துவோம். ஆனால் இதற்கான வசதி உங்கள் Android சாதனத்தில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ளது .
எவ்வாறு பிற எந்த வித 3rd Party App களின் உதவிகளும் இன்றி தானாகவே உங்களது தொலைபேசியில் App களை மறைப்பது என்று பார்க்கலாம்
Step 1 :
முதலில் உங்களுடைய தொலைபேசியில் App Menu இற்கு செல்ல கீழ் இருந்து மேலாக (Swipe) தள்ள வேண்டும்.
Step 2 :
அதில் வலது பக்க மேல் மூலையில் மூன்று புள்ளிகள் கொண்ட Menu Icon இருக்கும் அதனை Click செய்ய வேண்டும்
Step 3 :
அதில் ஒரு Menu தோன்றும். அதிலுள்ள Setting என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும்.
Step 4 :
அப்போது பல தெரிவுகள் தோன்றும். அதில் Hide App என்ற தெரிவு இருக்கும். அதனை தெரிவு செய்ய வேண்டும்.
Step 5 :
அப்போது உங்களுடைய Android சாதனதில் நீங்கள் Install செய்துள்ள அணைத்து App களையும் காண்பிக்கும். அதில் நீங்கள் என்ன என்ன App களை மறைக்க ஆசைப்படுகின்றீர்களோ அவை அனைத்தையும் தெரிவு செய்ய வேண்டும்.
Step 6 :
தெரிவு செய்த பின்னர் கீழே Done என்ற Button இருக்கும் அதனை தெரிவு செய்தால் போதும் நீங்களை மறைக்க நினைத்த Appகள் இனி உங்கள் தொலைபேசியில் காணப்படாது.
Note : மீண்டும் நீங்கள் அந்த App களை திரும்ப பெற அதே வழிமுறையை பின் பற்றி Hide செய்யப்பட App களின் மீது சிகப்பு நிறத்தில் - அடையாளம் இருக்கும் அதனை தொடுவதன் மூலம் அந்த App கள் மீண்டும் உங்கள் சாதனத்திற்கு கொண்டு வந்துவிடும்.
Demo : Samsung Galaxy M51
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL
Tags:
Tips and Trick