How to SriLanka connected to internet ?
இலங்கையில் முதல் இணைய சேவையானது 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
![]() |
SEA-ME-WE 2 வரைபடம் |
உலகில் 95 சதவீததிற்கு மேற்பட்ட இணைய பாவனையானது இவ்வகை Cableகள் மூலமே நடைபெறுகின்றது. மீதமுள்ள 5 சதவீததிற்கும் குறைவான அளவே செயற்கை கோள்கள் மூலம் இடம்பெறுகின்றன.
இந்த SEA-ME-WE யின் இரண்டாவது இணைப்பும் Colombo யில் உள்ள தரை கட்டுப்பட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த Cable ஆனது சுமார் 18700km தூரத்தினை கொண்டது. இதன் வேகம் 1.12Gbits ஆக காணப்பட்டது.
![]() |
SEA-ME-WE 3 வரைபடம் |
இதன் பின்னர் SEA-ME-WE இணைப்பின் மூன்றவது Cable தொகுதி இலங்கைக்கு 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் உரிமமும் SriLanka Telecom இடமே இருந்தது. இதன் நீளம் 39000 KM ஆகவும் இதன் இணைய வேகம் 4.6Gbits ஆகவும் இருந்தது. இதன் கட்டுப்பட்டு நிலையம் கல்கிஸ்சையில் அமைக்கப்பட்டு இருந்தது.
![]() |
SEA-ME-WE 4 வரைபடம் |
SEA-ME-WE இன் முதல் இரண்டு இணைப்புக்களும் மூன்றவது இணைப்பு வந்தவுடன் கைவிடப்பட்டது. அனால் இப்போது மூன்றவது இணைப்புக் கைவிடும் தருவாயில் உள்ளது.
பின்னர் 2005 ஆம் ஆண்டு SEA-ME-WE நான்காவது Cable தொகுதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் கட்டுப்பட்டு மையமும் Colombo யில் உருவாக்கப்பட்டது. இதன் உரிமமும் SriLanka Telecom யிடமே காணப்படுகின்றது. இந்த இணைப்பானது 18800Km தூரத்தினை கொண்டது.
பின்னர் SEA-ME-WE இணைப்பின் 5 ஆவது தொகுதி 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணைப்பே தற்போதுள்ள வேகமான இணைப்பாகும். இது 20000Km தூரத்தினை கொண்டதாகும். இது மாத்தறை மூலம் Colombo யில் உள்ள SriLanka Telecom யின் Data Center ஐ அடைகின்றது. இதன் வேகம் 24Tbps வேகத்தினை கொண்டுள்ளது.
![]() |
SEA-ME-WE 5 வரைபடம் |
இது தவிர்ந்த வேறு சில இணைப்புக்களும் காணப்படுகின்றது இவை குறிப்பிட இடங்களை மாத்திரம் இணைக்கும் குறுகிய தூர இனைப்புக்கலாகும்.
Bharat Lanka : இந்த அமைப்பானது ஒரு Point to Point இணைப்பாகும் இது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கின்றது. இதன் தூரம் 320Km ஆகும். இதான் இலங்கை உரிமம் SLT இடமும் இந்திய உரிமம் BSNL நிறுவனத்திடமும் உள்ளது. இது இலங்கையில் கல்கிஸ்ஸையையும் இந்தியாவில் தூத்துக்குடியையும் இணைக்கின்றது.
Dhiraagu திராகு : இந்த இணைப்பானது Point to Point இணைப்பாகும். இது இலங்கையையும் மாலைதீவையும் இணைக்கின்றது.
Bay of Bengal Gateway (BBG) : இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சிங்கப்பூர் வரை செல்கின்றது. இதன் உரிமம் இலங்கை Dialog சேவை வழங்குனரிடம் உள்ளது. இதன் வேகம் 6.4 Tbps ஆகும்.
ஏனைய தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை படிக்க இங்கே செல்லவும்.