How to Stop the Facebook Location Tracking ?
பேஸ்புக் தனது பயனாளர்களை இருப்பிடத்தை கண்காணிப்பதாக பல முறைப்பாடுகளை நாம் இணையத்தின் வாயிலாக கேட்டு இருப்போம். ஆனால் இது எம்மை அறியாமல் நாமே ஏற்படுத்திக் கொடுத்த அனுமதியாகும். இதனை பயன்படுத்தி நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை துல்லியமாக அறிந்து அதற்கு ஏற்றால் போல் விளம்பரங்களை எமக்கு காண்பிக்கின்றது.
இதனை எம்மால் நிறுத்த முடியும். இவற்றில் சில வழிமுறைகளை பயன்படுத்தி Location Tracking செயற்பாட்டு நிறுத்தலாம். அது எப்படி என்பதனை இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம்.
Step 1 :
Facebook App யினுள் சென்று அங்கே மேல் மூலையில் உள்ள Menu ல் "Setting & Privacy" என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும்.
Step 2 :
அதில் கீழே செல்லும் போது Privacy என்று இருக்கும். அதனை தெரிவு செய்து அதினுள் Location என்ற தெரிவு இருக்கும். அதனை தெரிவு செய்ய வேண்டும்.
Step 3 :
அதில் 3 தெரிவுகள் இருக்கும்.
1.Only use while using app
2. Always allow
3. Don't allow
இதில் உங்களுக்கு ஏற்றால் போல் உங்கள் தெரிவை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதில் "Don't allow" முற்றிலுமாக Facebook Location Tracking இனை தடுக்கும்.
Step 4 :
நீங்கள் இதற்கு முன்னர் சென்ற இடங்களின் தரவுகள் Facebook சேகரித்து வைத்து இருக்கும். அவற்றினை நீக்க Location History என்ற தெரிவு இருக்கும். அதனை Off செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் வெற்றிகரமாக Facebook Location Traking இனை Off செய்துவிட்டீர்கள். இனி Facebook உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்காது.
ஏனைய தகவல்களுக்கு : Tips & Tricks