எப்படி தேவையற்ற Call, Message, Email களை உங்களுடைய தொலைபேசியில் நிறுத்துவது.
அனால் இப்போது நீங்கள் உங்களுடைய கையடக்க தொலைபேசியில் யாருடைய உதவிகளும் இன்றி நீங்களாகவே எப்படி இவற்றை நிறுத்துவது என்பது பற்றிய பூரண அறிவினை இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு வழங்குகின்றோம். உங்களிடம் iPhone இருந்தால் இந்த செயல்பாட்டினை முயற்சித்துப் பாருங்கள்.
How to Block unknown Calls
Step 1
நீங்கள் iPhone யில் உள்ள Phone app இற்கு சென்று அதில் Call History என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும். அதில் தேவையற்றது என கருதும் தொலைபேசி இலக்கத்திற்கு அருகில் "i" அடையாளம் இருக்கும். இதனை தெரிவு செய்த பின் இது உங்களை Recent பகுதிக்கு கொண்டு செல்லும்.
Step 2
கீழே தள்ளிக்கொண்டு செல்லும் போது அடிப்பக்கத்தில் Block this caller என்ற தெரிவு இருக்கும். அதனை தெரிவு செய்து அதில் Block Contact என்பதனை தெரிவு செய்ய வேண்டும். இனி உங்கள் தொலைபேசிக்கு அந்த எண்ணில் இருந்து எந்த ஒரு அழைப்புக்களும் வராது.
How to Block unknown Text Messages
Step 1
நீங்கள் iPhone யில் உள்ள Messaging app இற்கு சென்று அதில் தேவையற்றது என கருதும் உரையாடலினை தெரிவு செய்து உள்ளே செல்லும் போது அதில் மேலே "i" அடையாளம் இருக்கும். அதனை தெரிவு செய்ய வேண்டும்.
Step 2
அதில் Info என்பதனை தெரிவு செய்ய வேண்டும். அதில் கீழ் பகுதிக்கு செல்லும் போது Block Contact என்ற தெரிவு இருக்கும். அதனை தெரிவு செய்து உங்கள் தொலைபேசிக்கு வரும் தேவையற்ற குறுஞ்செய்திகளை நிரந்தரமாக நிறுத்த முடியும்.
How to Block unknown Email
Step 1
நீங்கள் iPhone யில் உள்ள Email app இற்கு சென்று அதில் தேவையற்றது என கருதும் மின்னஞ்சலினை தெரிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.
Step 2
அதில் Block Contact என்ற தெரிவு இருக்கும். அதனை தெரிவு செய்து உங்கள் தொலைபேசிக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சலினை நிரந்தரமாக நிறுத்த முடியும்.
ஏனைய தொழில்நுட்ப தகவல்களுக்கு : Tips & Tricks
Tags:
Tips and Trick