WhatsApp யில் உள்ள Chat History இணை Android Phone யில் இருந்து iOS Phone இற்கு மாற்றிக்கொள்ளும் வசதியினை தற்போது WhatsApp நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதி மூலம் Text Message களை மாத்திரம் அன்றி Photos, Videos, Audios போன்றவற்றை கூட மாற்றிக்கொள்ள முடியும். Samsung தனது புதிய Smart Phone ஆன Z Flod 3 மற்றும் Z Flip 3 யில் iOS யில் இருந்து தரவுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்று அறிவித்து இருந்தது. அனால் ஏனைய Samsung Smart Phone மற்றும் ஏனைய Android Smart Phone களுக்கும் இந்த வசதி இருக்குமா என்ற தெளிவான விளக்கம் குறிப்பிடப்படவில்லை.
நாம் Android சாதனங்களில் பயன்படுத்தும் WhatsApp ஆனது தனது Backup களை Google Drive யில் சேகரித்து வைக்கும். iOS சாதனங்களில் பயன்படுத்தும் WhatsApp ஆனது iCloud யில் சேகரித்துவைக்கும். இதன் மூலம் அதிகார பூர்வமாக Chat History களை மாற்ற அவை ஒரே இயங்குதளத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
இந்த புதிய வசதியான இணையத்தின் ஊடக Chat History களை பரிமாறுவதை விட பௌதீக ரீதியாக USB Type C Cable மூலம் தகவல்களை பரிமாறுவது சிறப்பானதாகவும் வேகமாகவும் இருக்கும்.
துரதிஷ்டவசமாக நீங்கள் இந்த வசதி அறிமுகப்படுத்த முன்னர் ஏதோ ஒருவகையில் இந்த பரிமாற்றத்தை செய்து இருந்தால் இப்போது செய்யும் பரிமாற்றம் இரண்டும் இணையாது வேறு வேறாகவே இருக்கும் என்று WhatsApp நிறுவனம் குறிப்பிடுகின்றது.
மேலும் WhatsApp நிறுவனம் அறிவிக்கும் போது இந்த வசதியானது தற்போது Samsung யின் புதிய Smart Phone களுக்கு மாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும். பின்னர் Android 10 இற்கு மேல் இயங்குதளத்தினை கொண்ட Samsung சாதனங்களுக்கும் இந்த வசதியானது வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என WhatsApp நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Nice post
ReplyDelete