Telegram now update with Group video call upto 1000 views, Video message 2.0, Video Playback speed
நம்மில் அதிகமானவர்கள் தற்போது பல வகைப்பட்ட Messaging Appsகளை பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் மிகப் பிரபல்யமனது தான் இந்த Telegram Messaging App ஆகும். அந்த வகையில் Telegram ஆனது தனது பவனையாளர்களுக்காக வேண்டி பல விதமான புதுவகை வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.
Group Video Call
அந்த வகையில் Telegram தனது புதிய Update இனை வெளியிட்டுள்ளது. இது வீடியோக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தந்து Group Video Call தற்போது 1000 பார்வையாளர்களை அனுமதிக்கின்றது.
Video Playback Speed
மேலும் இந்த வீடியோ அழைப்புக்களைக் உயர் தரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை 0.5x, 1x, 1.5x & 2x வேகத்தில் பார்க்க முடியும். வீடியோ அழைப்புக்களை பிறருக்கு பகிரும் வசதியும் உள்ளது.
Video Message 2.0
Stickers மற்றும் Gif களை பகிர்வதைப் போன்று இப்போது குறுகிய வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த வீடியோக்களை நீங்கள் சத்தத்துடனும் பகிர முடியும். இதற்கு நீங்கள் Microphone Icon யில் சென்று Voice Message இக்கு பதிலாக Video Message இனை தெரிவு செய்து அனுப்ப முடியும்.