Google bans tracking tools that sold user's location data
COVID-19 மற்றும் பிற விடயங்களுக்காக Android பயனாளர்களின் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்கும் பயனாளர்களின் இருப்பிடத்தை அறிய உதவும் Tracking நிறுவனங்களின் Tools களை Google நிறுவனம் தடை செய்துள்ளது.
சில நிறுவனங்கள் பிற Android App களில் உள்ளே ஒரு கருவியாக இருந்து கொண்டு பல நிறுவனங்கள் பயனாளர்களின் இருப்பிடங்களை சேகரிக்கின்றது. அந்த வகையில் SafeGraph நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் The New York Times மற்றும் Centers for Disease Control நிறுவனங்களுக்காக தரவுகளை சேகரித்து இருந்தது.
Google நிறுவனம் SafeGraph உடைய மென்பொருள் விருத்தி செய்யும் கருவிகளை 7 நாட்களுக்கு அகற்றும் படி கூறி இருந்தது. அனால் SafeGraph Android App களில் இருந்து இன்னும் தரவுகளை சேகரிக்கின்றத என்பது தொடர்பான தெளிவான விளக்கம் குறிப்பிடப்படவில்லை.
இதே போன்று 2020 டிசம்பர் காலப்பகுதியில் X-Mode Social என்ற இதே போன்ற மென்பொருளை Google மற்றும் Apple நிறுவனம் தடை செய்து இருந்தது குறிபிடத்தக்கது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL