How to hide WhatsApp chat without anyone see ?
நாம் WhatsApp யில் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபடும் போது ஏதோ ஒரு காரணத்திற்காக குறித்த ஒருவரின் அல்லது பலரின் Chat இனை பிறரின் கண்களில் படாதவாரு ஒழித்து வைக்கும் வசதி WhatsApp யில் உள்ளது.
நீங்கள் WhatsApp யில் chat களை மறைக்கும் வசதி முன்னரும் காணப்பட்டது. அதனை Archive என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த வகையில் நீங்கள் தேவையானவர்களின் கலந்துரையாடல்களை இதனை பயன்படுத்தி மறைக்க முடியும்.
ஆனால் அந்த வசதி தற்காலிகமே. ஏன் என்றால் நீங்கள் Archive செய்த நபர் உங்களுக்கு மீண்டும் Message செய்தல் அவரது முழு கலந்துரையாடலும் வெளிப்பட்டுவிடும். இதனால் இந்த Archive செயல்பாடானது தற்காலிகமாகவே கலந்துரையாடல்களை மறைத்து வைக்கின்றது.
ஆனால் இப்போது WhatsApp நிரந்தரமாக கலந்துரையாடல்களை மறைத்து வைக்கும் வசதியினை வழங்கியுள்ளது. இது நீங்கள் மறைத்து வைக்க நினைக்கும் கலந்துரையாடல்களை தனியான கோப்பில் சேகரிக்கின்றது.
Archive on WhatsApp lets you organize your private messages and prioritize important conversations. Your Archived chats will now remain archived and muted but you can always change them back! pic.twitter.com/QbAY6iu81p
— WhatsApp (@WhatsApp) July 27, 2021
இதை எவ்வாறு செயற்படுத்துவது ?
01. WhatsApp இனை முதலில் Open செய்து More Option இணை தெரிவு செய்து அதில் உள்ள "Chats" Tab இணை தெரிவு செய்ய வேண்டும்.
02. அதில் யாருடைய கலந்துரையாடலை மறைக்க விரும்புகின்றீர்களோ அவற்றை தெரிவு செய்ய வேண்டும்.
03. பின்னர் அதில் "Chat History" இனை தெரிவு செய்து பின்னர் "Archive all chats" என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
Tags:
Tips and Trick