What is the Encryption & Decryption in Tamil ?
நாம் அடிக்கடி Encryption என்ற வார்த்தையை பல இடங்களில் கேள்விப்பட்டு
இருப்போம். “WhatsApp யில் நாம் அனுப்பும் தகவல்கள் Encrypt செய்யப்பட்டுள்ளது, Encrypt
செய்யப்பட்ட தரவுகள் உயர் பாதுகாப்பானவை, Encrypt
செய்யப்பட்ட தரவுகளை யாரும் திருட முடியாது “ என்ற
வசனங்களை பல இடங்களில் கேள்விப்பட்டு இருப்போம். Encrypt
என்றால் என்ன என்ற பூரண தெளிவான விளக்கத்தை
இந்த பதிப்பின் ஊடக நாம் பார்க்கலாம்.
Encryption என்ற சொல் கிரேக்க நாட்டில் இருந்து வந்த Kryptos என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். இதன் அர்த்தம் மறைத்தல்/ரகசியம் என்பதாகும்.
நாம் ஒரு பக்கம் இருந்து தகவல்களை அனுப்பும் போது அதனை அடுத்த பக்கம்
உள்ள நபர் பெறுவார். ஆரம்பத்தில் Encryption வசதிகள் இல்லாமையினால் இருவர்களுக்கு இடையே
நடைபெறும் கலந்துரையாடலை மூன்றாம் நபர் ஒருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள்
அதிகம். இந்த இடத்தில் தான் Encrypt பயன்படுத்தப்படுகின்றது.
Encryption Example :
Encryption என்பதனை நீங்கள் இலகுவாக புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை
பார்க்கலாம்.
நீங்கள் “Hello” என்ற வார்த்தையை அனுப்பும் போது இதனை நீங்களும்
அடுத்த பக்கம் உள்ள பெறுனரும் புரியும் வகையில் Encrypt செய்ய வேண்டி இருக்கும். இதற்கு நீங்கள் இந்த
சொற்களை வரிசைப்படுத்தி அதற்கு இலக்கங்களை இட வேண்டும். H-8,
E-5, L-12, L-12, O-15 என்று
வரிசைப்படுத்த வேண்டும். பின்னர் நீங்கள் அதனை அனுப்பும் போது 8
5 12 12 15 என்று
அனுப்ப வேண்டும். இதனை பெற்ற நபர் அந்த இலக்கங்களுக்கு எண்களை இட்டு “Hello” என்று மாற்றி புரிந்து கொள்வார். இவ்வாறு
அனுப்புபவரும் பெறுபவரும் மாத்திரம் புரிந்து கொள்ளும் வகையில் தகவலை அனுப்புவதையே
Encryption என்று குறிப்பிடுகின்றோம்.
எவ்வாறு தகவலை பெரும் நபர் சரியாக மாற்றி புரிந்து கொள்கின்றார் என்ற
கேள்வி இந்த இடத்தில் வரலாம். அதனை தான் நாம் Decryption என்று குறிப்பிடுகின்றோம். யாருக்கும் புரியாத
விதத்தில் அனுப்பப்படும் தகவலை இருவர்களும் மாத்திரம் அறிந்த தந்திரத்தின் மூலம் Decrypt
செய்து கொள்கின்றனர். இதனால் பிற நபர்கள்
எவரும் Hack செய்ய முடியாது. அவ்வாறு தகவலை திருடினாலும் அதனை Decrypt
செய்யும் தந்திரம் தெரியாமல்
அவர்களால் எதனையும் செய்ய முடியாது.
Encryption முறையினை கி.பி 700 களில் Spartans பயன்படுத்தியதாகவும் அவர்கள் Leather Strip யில் அர்த்தம் அற்ற குறிப்புகளை எழுதி அதனை Unlock செய்ய எழுத பயன்படுத்திய குச்சியில் சில அளவீடுகளை குறித்து இருந்தனர். அதனை கொண்டு அந்த சொற்களை படித்து விளங்கி கொண்டனர்.
சரி நாம் இப்போது இதனை தொழில்நுட்பம் சார்ந்த கண்ணோடு பார்க்கலாம்.
நாம் இவ்வாறு Encrypt மற்றும் Decrypt செய்யப்பட்டுள்ள தகவலினை Cryptography
என்று அழைக்கின்றனர். அதிலும் Encrypt
செய்யப்பட்டாத சாதாரண தரவு Plaintext
எனவும், Encrypt செய்யப்பட்ட தரவு Ciphertext
என்று அழைக்கின்றனர். Encode
மற்றும் Decode செய்ய பயன்படுத்தும் தந்திரத்தினை Encryption
Algorithm / Ciphers என்று அழைக்கின்றனர்.
இந்த Ciphers இனுள் மாற்றமடையக்கூடிய Algorithm
எழுதப்பட்டு இருக்கும். இதனையே Key
என்று அழைக்கின்றனர். Encrypt
செய்து அனுப்பட்ட தகவலை மீள Decrypt
செய்ய கண்டிப்பாக இந்த Key
அவசியம். இந்த Key இணை Public Key மற்றும் Private Key என இரண்டு வகையில் பயன்படுத்துகின்றனர். Public
Key இணை யார்
வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அனால் Private Key அவர்களிடம் மாத்திரமே காணப்படும்.
ஒருவரிடம் Public Key மற்றும் Private Key இரண்டும் காணப்படும். இரண்டிற்கும் இடையே ஒரு
தொடர்பு இருக்கும். இதில் ஒன்றினை வைத்தே இன்னொன்றினை Unlock
செய்ய முடியும். இதனை தெளிவாக கீழே உள்ள
உதாரணம் விளக்குகின்றது.
உதரணமா A என்பவர் தகவல் ஒன்றினை B
என்பவருக்கு Encrypt செய்து அனுப்பும் போது B
உடைய Public Key இணை வைத்து Lock செய்து அனுப்புவார். இதனை பெற்று கொண்ட B
அவரிடம் உள்ள Private Key இணை வைத்து Unlock செய்யும் போது
இதனுடைய தொடர்பை புரிந்து கொண்டு அந்த
செய்தியினை Decrypt செய்து காண்பிக்கும். இந்த முறை சாதரணமாக Encrypt தகவல்களை அனுப்பும் போது
பயன்படுத்தப்படுகின்றது.
(B Public Key →
B Private Key = Unlock)
ஒரு தகவலை மிக பாதுகாப்பான முறையில் அனுப்ப A
என்பவர் B என்பவருக்கு தகவலை Encrypt
செய்து அனுப்பும் போது B
உடைய Public Key இணை வைத்து Lock செய்து அதனுடன் A என்பவருடைய Private Key இணையும் பயன்படுத்தி Lock
செய்வர். இப்போது B
யிற்கு கிடைக்கும் தகவல் இரண்டு
வகை Lock செய்யப்பட்டு இருக்கும்.
B உடைய
Public Key யிற்கு B உடைய Private Key இணை வைத்து Unlock செய்து விடுவார். இப்போது A
உடைய Private Key இருக்கும் அதனை Unlock செய்ய A உடைய Public Key இணை பெற்று Unlock செய்வர்.
(B Public Key +
A Private Key
→ B Private
Key → A Public Key = Unlock)
WhatsApp யில் End-to-end Encryption முறை பயன்படுத்தப்படுகின்றது. இதனால் Message இணை அனுப்புபவரும் அதனை பெறுபவரும் மாத்திரமே படிக்க முடியும். இடையில் உள்ள யாராலும் அந்த Message இணை படிக்க முடியாது ஏன் WhatsApp Company யால்கூட படிக்க முடியது.
Encryption யின் வகை (Type of Encryption)
1.
Bring Your Own Encryption (BYOE)
2.
Cloud Storage Encryption
3.
Column-Level Encryption
4.
Deniable Encryption
5.
Encryption as a Service (EaaS)
6.
End-to-end Encryption (E2EE)
7.
Field-Level Encryption
8.
FDE
9.
Homomorphic Encryption
10. HTTPS
11. Link-level
Encryption
12. Network
Level Encryption
13. Quantum
Cryptography
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH - TAMIL