WHAT IS THE DARK WEB IN TAMIL ?
NOTE : இந்த கட்டுரையானது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அறிவினை வழங்குவதற்காகவே எழுதப்பட்டது.

TECH NEWS | TECH ARTICLE | TECH HISTORY | MONEY EARNING | TIPS & TRICKS
இணையம் நமது வாழ்வில் ஒன்றிப்பினைந்த ஒரு விடயமாகவே மாறிவிட்டது. நாம் சாதரணமான என்ன ஒரு விடயமாக இருந்தாலும் உடனே Google யில் தேடி பெற்றுக் கொள்கின்றோம். அனால் இவை மொத்த இணையத்தளத்தில் மிகச் சிறிய அளவே.
உதாரணமாக ஒரு தீக்குச்சியை எடுத்துக் கொண்டால் அதில் மேலே உள்ள தொப்பி பகுதியே நாம் பயன்படுத்தும் சாதரண இணையத்தளம். அதனை பார்க்க பெரும் பகுதியே கீழே உள்ள குச்சிப் பகுதி நாம் அறியாத இந்த Dark or Deep Web ஆகும்.
நாம் இணையத்தை மூன்று பகுதிகளாக பிரித்து பார்க்க முடியும்.
01. Surface Web
02. Deep Web
03. Dark Web
What is the Surface Web ? (சாதாரண இணையம்)
Surface இணையம் என்பது நாம் சாதரணமாக பயன்படுத்தும் இணையம் ஆகும். இது நாம் அன்றாடம் பயன்படுத்தும்
Google, Yahoo, MSN, Bing போன்ற பல தேடு பொறிகளை கொண்டு தேவையான விடயங்களை தேடி பெற்றுகொள்கின்ற ஒரு இடம். நாம் அதிகம் பரீட்சயமானதும் இதில் தான். இது மொத்த இணையத்தளத்தில் 4% ஆனா அளவே உள்ளது.
என்னது 4 % ஆ ? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். ஆம் மொத்தத்தில் நாம் பயன்படுத்துவதை பார்க்க மிக பிரமாண்டமான ஒரு பகுதி நமக்கு தெரியாமல் புதைந்து கிடக்கின்றது.
What is the Deep web ? (ஆழமான இணையம்)
நாம் குறிப்பிட்டது போல் 4% ஆனவை Surface இணையமாக இருந்தால் மீதி 96% உம் இந்த Deep Web ஆகும். சாதரணமாக இணையத்தளத்தில் தேடி பெற முடியாத பல தகவல்கள் இதில் புதைந்து கிடக்கின்றன. இதில் அரசாங்கத்தின் தகவல்கள், ஏனைய நிறுவனங்களின் தரவுகள் அவர்களின் இணையத்தளங்கள் என்பன இந்த Deep Web யிலேயே உருவாக்கப்படுகின்றது.
இதற்குள் பிரவேசிப்பதற்கும் தரவுகளை பார்வையிடவும் அவர்களுக்கு விசேடமாக அனுமதி வழங்கப்பட்டு இருக்கும் அல்லது அந்த பயனருக்கான User Name, Password வழங்கப்பட்டு இருக்கும். அவர்கள் மாத்திரமே உள்ளே சென்று தரவுகளை பார்க்க முடியும். இந்த தரவுகள் அனைத்தும் Encrypt செய்யப்பட்டு இருக்கும்.
இந்த Deep Web யில் அரசாங்கங்களின் ரகசியமான விடயங்கள் பல நிறுவனங்களின் ரகசிய விடயங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும். நாம் அடிக்கடி கேள்விப்படுவோம் சில நிறுவனங்களின் தரவுகள் Hack செய்யப்பட்டு விட்டது என்று. அவை அனைத்தும் Deep web யில் உள்ள தரவுகள் திருடப்படுவதனையே குறிக்கின்றது.
What is the Dark Web ? (இருண்ட இணையம்)
இப்போது நமது தலைப்பிற்கு வருவோம். Dark Web என்பது இணையத்தின் மூன்றாவது பகுதி ஆகும். இது Deep web யின் ஒரு பிரிவு ஆகும். எவ்வாறு Deep Web அரச நடவடிக்கைகள், நிறுவன செயற்பாடுகள் என சட்டரீதியாக நன்மையான விடயங்களுக்காக செயல்படுகின்றதோ அதற்கு மாற்றமான அருவெருக்கத்தக்க சட்டத்திற்கு முரணான கெட்ட விடயங்கள் பல இடம்பெறுகின்ற ஒரு பகுதியே இந்த Dark Web ஆகும்.
இதில் பல சட்டத்திற்கு முரணான விடயங்கள் இடம்பெறுகின்றன.
01. போதைப்பொருள் விற்பனை
௦2. விபச்சாரம்.
03. Hacking சேவைகள்
04. சட்டவிரோத பணப்பரிமாற்றம்
என்று இதில் உள்ள பல சேவைகளை அடுக்கிக் கொண்டே செல்லெலாம். இதனை நாம் சாதரணமாக பயன்படுத்தி விட முடியாது. இதனில் நுழைய சாதாரண தேடு பொறிகளால் முடியாது. இதற்காக Encrypt செய்யப்பட்ட விஷேடமாக வடிவமைக்கப்பட்ட தேடு பொறிகள், Browser கள் அவசியம். இதற்காக உருவாக்கப்பட்ட இணைய உலாவிதான் TOR.
What is the TOR ?
இது Encrypt செய்யப்பட்ட ஒரு Browser ஆகும். The Onion Router (TOR) இதனை வெங்காயத்திற்கு ஒப்பிடுகின்றனர். அதாவது வெங்காயம் எவ்வாறு உரிக்க உரிக்க தோல் மட்டுமே காணப்படுகின்றதோ உள்பகுதியில் வெற்றிடமாகவே இருக்கும். இது போன்று நீங்கள் தேடப்படுகின்ற விடயம் அவை யாரால் தேடப்படுகின்றது என்ற அனைத்து தரவுகளும் யாருக்குமே தெரியாமல் மறைக்கப்படுகின்றது.
TOR Browser ஆனது 1990 களில் நடுப்பகுதியில் அமெரிக்க கடற் படை ஆராய்ச்சி ஆய்வக ஊழியர்களான கணிதவியலாளர் Paul Syverson மற்றும் கணனி விஞ்ஞானி Michael G. Reed, David Goldschalag ஆகியோரால் அமெரிக்க உளவுத்துறை தொடர்பாடல் தரவுகளை பரிமாற உருவாக்கப்பட்டது.
பின்னர் அதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு சட்டத்திற்கு முரணான செயல்பாடுகளிற்காக இன்று பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.
Dark Web யில் சட்டத்திற்கு முரணான செயலில் ஈடுபடுகின்றவர்களை பிடிக்க முடியாதா ?
இந்த செயல்பாட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஏன் என்றால் நாம் பயன்படுத்தும் TOR Browser Encrypt செய்யப்பட்டு இருக்கும் இது தனது IP Address இணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் நீங்கள் இலங்கையில் இருந்து இதனை பார்த்துக்கொண்டு இருந்தால் நீங்கள் இங்கிலாந்தில் இருப்பதாக காட்டும் சிறிது நேர்த்தி அமெரிக்க, ஆஸ்திரேலிய என IP Address இனை மாற்றிக் கொண்டே செல்லும்.
அப்போது இவர்கள் பண கொடுக்கல் வாங்கல்கள் செய்யும் போது Account தரவுகளை கொண்டு பிடிக்க முடியுமே என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். இதற்காகவே இவர்கள்
இலத்திரனியல் பணம் (Cryptocurrency) இனை உபயோகிக்கின்றனர்.
இதில் Bitcoin என்ற மிக பிரபல்யமான Cryptocurrency பயன்படுத்தப்படுகின்றது. இதனை கொண்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதால் யாராலும் எம்மை கண்கானிக்கவே முடியாது.
அண்மையில் கூட இந்த Dark Web இணையத்தை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட ஒரு நபரினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 5000 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது.
Dark Web இனை எவ்வாறு இனம் காண்பது ?
இதனை சாதாரண இணையத்தளத்தில் தேட முடியாது என்பது பற்றி குறிப்பிட்டு இருந்தோம் அதனால் இவற்றினை விசேடமாக வடிவமைக்கப்பட்ட Browser இனை பயன்படுத்தி தேட வேண்டும்.
இதனால் நாம் சாதரணமாக பயன்படுத்தும் இணையத்தளங்களுக்கு பின்னல் Domain Name பயன்படுத்தப்பட்டு இருக்கும். அவை .com, net, lk, gov, etc... என்றவாரு காணப்படும். அனால் Dark Web இனை பொருத்தவரை அர்த்தமற்ற எண்கள் இலக்கங்களை கொண்டு அமைந்து இருக்கும். Domain Name உம் இருதியில் .onion என்று அமைந்திருக்கும்.
இந்த இணையத்தளங்களை இலகுவில் யாரும் அடைந்து விட முடியாது. இவ்வகை இணையத்தளங்களை அரசாங்கம் இனம் கண்டு அழித்து வந்தாலும் நாளுக்கு நாள் புதுவகை இணையத்தளங்கள் உருப்பெற்றுகொண்டு தான் வருகின்றன.