WhatsApp பாதுகாப்பாக உள்ளதா ? - Safety Tips

WhatsApp safety tips in Tamil

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பாடல் சாதனமாக இந்த WhatsApp மாறி உள்ளது. இது உலகளாவிய ரீதியில் மாதாந்தம் 2 பில்லியன் மக்களை நிகழ் பாவனையாக கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி வேகமே Facebook நிறுவனம் இதனை வாங்க ஒரு காரணமாக இருந்தது எனலாம்.


எந்த அளவு பாவனை அதிகரித்து கொண்டு செல்கின்றதோ அந்த அளவு இதனை பயன்படுத்துவதால் ஆபத்துகளும் இருந்து வந்தது. இதனால் WhatsApp நிறுவனம் புதிய பாதுகாப்பு முறைகள், கொள்கைகளில் மாற்றங்கள் என அடிக்கடி கொண்டு வந்துகொண்டுதான் இருக்கின்றன.


இருப்பினும் எவ்வளவுதான் புதிய பாதுகாப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தகவல் திருட்டுக்களும், தகவல்கள்வெளியில் கசிவதும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு ஓர் முக்கிய காரணம் பவனையாளர்களாகிய நமது ஒத்துழைப்பு இன்மையே.


WhatsApp தனது பாவனயாளர்களுக்கு புதிய பாதுகாப்பு வசதிகளை கொண்டு வந்தாலும் அவற்றினை பயன்படுத்துவதில் நாம் சில பிழைகளை விட்டுவிடுகின்றோம். நமது எச்சரிக்கையற்ற செயல்பாடுகள் நமது WhatsApp தரவுகள் திருடுபோக காரணமாக அமைந்து விடுகின்றது.


அவ்வாறு WhatsApp தரவுகள் திருடுபோகமல் இருக்க நாம் என்ன என்ன செய்ய வேண்டும் என்ற விளக்கத்தினை இந்த பதிவின் வாயிலாக நாம் பார்க்கலாம்.

WhatsApp Safety Tips 1 : (Two-step Verification)

அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டிய முதலாவது பாதுகாப்பு வசதியே இந்த Two Step Verification ஆகும். இதனால் பிறர் உங்களுடைய WhatsApp இனை Hack செய்தலும் நீங்கள் கொடுக்கும் இரகசிய எண்கள் இல்லாமல் உங்களுடைய WhatsApp இனை திறக்க முடியாது. இதனை எவ்வாறு செய்வது ?

Step 1

WhatsApp இல் வலது மேல் மூளையில் உள்ள 3 புள்ளிகளை தெரிவு செய்து அதில் "Settings" என்ற தெரிவு தோன்றும். அதனை தெரிவு செய்ய வேண்டும்.




Step 2

பின்னர் தோன்றும் Settings Menu யில் "Account" என்ற தெரிவு இருக்கும் அதனை தெரிவு செய்ய வேண்டும்.


Step 3

Account Menu யில் "Two-step Verification" என்ற தெரிவு இருக்கும். அதனுள் செல்ல வேண்டும்.



Step 4

இப்போது கீழே தோன்றும் Menu யில் "Enable" என்ற Button இனை தெரிவு செய்ய வேண்டும்.


Step 5

பின்னர் நீங்கள் 6 இலக்கம் கொண்ட இரகசிய எண்ணினை கொடுக்க வேண்டும். அதே எண்ணினை மீண்டும் கொடுக்க வேண்டும்.


Step 6

பின்னர் நீங்கள் இந்த இரகசிய இலக்கத்தினை பாதுகாக்க விரும்பும் மின்னஞ்சல் முகவரியினை இரு முறை கொடுக்க வேண்டும்.


Step 7

பின்னர் நீங்கள் Two-step Verification இனை வெற்றிகரமாக செயற்படுத்திவிட்டீர்கள்



WhatsApp Safety Tips 2 : (WhatsApp Web)

இந்த வசதியானது நாம் தொலைபேசியில் மாத்திரமே WhatsApp பயன்படுத்த கூடியதாக இருந்த சமயம் தொலைபேசியில் உள்ள WhtasApp இனை கணனியிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் வகையில் WhatsApp நிறுவனத்தால் வழங்கப்பட்ட வசதியாகும்.

இதனைப் பயன்படுத்தி உங்கள் தொலைபேசியில் உள்ள WhatsApp இனை யாராவது திருட நினைத்தால் அவர்கள் தங்களுடைய கணனியில் உங்கள் WhatsApp இனை WhatsApp Web ஊடக பார்க்க முடியும். இதனால் நீங்கள் அடிக்கடி உங்கள் WhatsApp கணனியில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதனை பரிசோதித்து கொள்வது நன்று.

அண்மையில் WhatsApp வெளியிட்ட Update மூலம் உங்கள் WhatsApp WhatsApp Web மூலம் இணைக்கப்பட்டு இருந்தால் உங்களது தொலைபேசிக்கு Notification மூலம் காண்பிக்கும்.

இதனால் நீங்கள் உங்களுடைய தொலைபேசி பிறரால் கண்காணிக்கப்படுகின்றதா என்பதில் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.  

Step 1

WhatsApp இல் உள்ள மூன்று புள்ளி  Menu இற்கு சென்று அதில் "Linked Devices" என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும்.


Step 2

பின்னர் உங்களுக்கு "Linked a Device" என்ற  Button கொண்ட Menu ஒன்று தோன்றும். அதனை Click செய்ய வேண்டும்.


Step 3

அதில் QR Code இனை Scan செய்வதற்காக உங்களுடைய Camera Open ஆகும். இப்போது நீங்கள் கணனியில் web.whatsapp.com என்பதனை Open செய்ய வேண்டும். அதில் தோன்றும் QR Code இனை Scan செய்ய வேண்டும்.

Step 4

இப்போது நீங்கள் கணனியுடன் இணைத்த பின்னர் உங்களுடைய தொலைபேசியில் நீங்கள் எதனுடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்ற தகவல் காண்பிக்கும். அதனுடன் உங்களுடைய Notification Bar யிலும் நீங்கள் கணனியுடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்ற செய்தி காண்பிக்கும்.



WhatsApp Safety Tips 3 : (Group Privacy)

இது நாம் அன்றாடம் நேர்கொள்ளும் பிரச்சினை ஆகும். அதாவது நீங்கள் யாரென்றே தெரியாத ஒரு நபரால் WhatsApp Group களில் இனைக்கப்படுகின்றீர்கள் என்றால் இதன் மூலம் நாம் சம்பந்தமே அற்ற ஒரு குழுமத்தில் இருந்து Messageகளை பெற்றுக்கொண்டு இருப்போம்.

நமது அனுமதி இன்றி நம்மை ஒருவர் குழுமத்தில் இணைக்கின்றார் என்றால் அந்த இடத்தில் நமது Privacy பாதிக்கப்படுகின்றது. இதனை நாம் தவிர்க்க முடியும். இதன் மூலம் நம்மை யார் யார் குழுமத்தில் இணைக்க முடியும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.

Step 1

WhatsApp இல் வலது மேல் மூளையில் உள்ள 3 புள்ளிகளை தெரிவு செய்து அதில் "Settings" என்ற தெரிவு தோன்றும். அதனை தெரிவு செய்ய வேண்டும். அதில் "Account"  என்ற தெரிவில் உள்ள "Privacy" என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும்.



Step 2

அதில் கீழே "Groups" என்ற தெரிவு காணப்படும். அதனை தெரிவு செய்ய வேண்டும்.



Step 3

அதில் "My Contacts" அல்லது "My Contacts except...." என்ற தெரிவை தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் உங்களை WhatsApp யில் இணைக்கும் நபர்களை கட்டுப்படுத்த முடியும்.


WhatsApp Safety Tips 4 : (Security Notification)

நாம் WhatsApp யில் அனுப்பும் ஒவ்வொரு செய்திகளும் கலந்துரையாடல்களும் end-to-end encryption செய்யப்பட்டு இருக்கும் என்று கேள்விப்பட்டு இருப்போம். இவ்வாறு செய்வதால் நாம் அனுப்பும் Messageகள் பிற ஒருவரால் இடையில் திருடி படிக்கச் முடியாது. நமக்கும் நாம் செய்தி அனுப்புபவரும் மாத்திரமே படிக்க முடியும்.

இந்த வசதியானது நமது WhatsApp யில் தானாகவே செயல்படுத்தப்பட்டு இருக்கும். இதனது Code மாற்றும் போது அது தொடர்பான செய்தி உங்களுக்கு Notification ஆக காண்பிக்கும் இதனை On செய்து வைப்பது அவசியமாகும். அதனை கீழே பார்க்கலாம்.


Step 1

WhatsApp இல் வலது மேல் மூளையில் உள்ள 3 புள்ளிகளை தெரிவு செய்து அதில் "Settings" என்ற தெரிவு தோன்றும். அதனை தெரிவு செய்ய வேண்டும். அதில் "Account"  என்ற தெரிவில் உள்ள "Security" என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும்.



Step 2

அதில் "Show security notification" என்ற தெரிவு இருக்கும் அதனை On செய்தல் போதும். உங்களுக்கு Code மாற்றும் போது Notification அனுப்பப்படும். 






Post a Comment

Previous Post Next Post