Windows 11 Start Menu இணை எப்படி மாற்றுவது ?

How to change the Windows 11 Start Menu in to old style of  Windows 10 ?

How to change the Windows 11 Start Menu in to old style of  Windows 10 ?

நாம் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு மேலாக Windows 10 பயன்படுத்தி வருகின்றோம். அதில் சிறப்பு தேர்ச்சியும் அடைந்து இருப்போம். அனால் தற்போது வெளியாகி உள்ள Windows 11 யில் பயனர் இடைமுகம் (User Interface) சற்று வித்தியாசமா இருப்பது நமது வேலையில் தாமதத்தினை ஏற்படுத்த கூடும்.


உதாரணமாக Windows 10 யில் Start Menu இடது பக்க மூலையில் இருக்கும். இது Windows 10 யில் மாத்திரம் இல்லாமல் Windows யின் முன்னைய அணைத்து பதிப்பிலும் அவ்வாறே காணப்பட்டது. அனால் Windows 11 யில்மத்தியில் Start Menu இருப்பது சிறுது காலம் பழகும் வரை கடினமாகவே இருக்கும்.


இதனை எம்மால் மாற்ற முடியும். உங்களுக்கு முன்னைய இயங்குதளங்கள் போன்று வலது பக்க மூலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதனை போன்று எம்மால் மாற்ற முடியும்.  அது பற்றியே இந்த பதிப்பில் பார்க்கலாம்.

How to change the Windows 11 Start Menu

Step 1 :     முதலில் உங்கள் Windows 11 யில் உள்ள Search icon இணை தெரிவு செய்து அதில் சில தெரிவுகள் காண்பிக்கப்படும்.


Step 2 :     அதில் Settings இணை தெரிவு செய்ய வேண்டும். இதில் இன்னுமொரு Menu தோன்றும்.


Step 3 :     அதில் Personalization என்ற தெரிவினை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் Taskbar என்ற தெரிவு இருக்கும் அதனை தெரிவு செய்ய வேண்டும். 


Step 4 :     Task Bar Behavior அருகில் உள்ள Arrow Mark இணை தெரிவு செயும் போது அதில் Center , Left என்ற தெரிவு இருக்கும்.


Step 5 :     அதில் Left என்ற தெரிவை தெரிவு செய்வதன் மூலம் உங்களுடைய Start Menu பழைய Windows 10 ஐப் போன்று இடதுபக்கம் வந்துவிடும்.  

Post a Comment

Previous Post Next Post