Instant Message என்பது கடந்த சில வருடமாக மக்களிடையே பாரிய பிரபல்யமடைந்த ஒன்றாக இருந்து வருகின்றது. அனால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் இவைகள்தான். இதில் தான் அதிகம் தகவல் திருட்டுக்கள் இடம்பெறுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனால் பல Instant Messaging சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பல பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளன. அவற்றில் end-to-end encryption வசதியும் ஒன்று. அனால் Facebook தனது பயனாளர்களின் பாதுகாப்பு கருதி புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது.
நீங்கள் Facebook Messenger App இணைய பயன்படுத்தி ஒருவருக்கு செய்தி ஒன்றினை அனுப்பினால் அந்த செய்தி சிறிது நேரத்தில் மறைந்து விடும். இதனை Secrete Conversation என Facebook நிறுவனம் குறிப்பிடுகின்றது. இந்த வசதி ஏற்கனவே Telegram App யில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியினை நாம் சாதரணமாக உரையாடலில் ஈடுபடும் பகுதியில் மேற்கொள்ள முடியாது. இதற்காக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட Encrypt செய்யப்பட்ட தனித்துவமான பகுதி ஒன்று Facebook Messenger App யில் உள்ளது.
How to send secret messages in Facebook
