Online யில் எவ்வாறு பொருட்களை வாங்குவது ? - பாகம் 01

What is the online Shopping
  ஒரு காலம் இருந்ததாகவும் அதில் மக்கள் அனைவரும் கை பையுடன் சந்தைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததாகவும் நாம் நமது பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லும் காலம் வெகு தூரம் இல்லை. இந்த கொரோனா நமக்கு கெட்ட அனுபவத்தை தந்து இருந்தாலும் நல்ல விடயங்கள் சிலவற்றையும் கூட எமக்கு தந்து இருக்கின்றது.


  இதற்கு நாம் முதலில் தொழில்நுட்பத்திற்கே நன்றி சொல்ல வேண்டும். நமக்கு தேவையான பொருள் ஒன்றாக இருக்கும் அதை வாங்க நாம் தேடி அலையும் கடைகள்  நூறாக இருக்கும். அனால் இந்த காலம் செய்த கோலம் நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டு விரல் நுனியில் பொருட்களை கொள்வனவு செய்கின்றோம்.


  அது எப்படி சாத்தியம் ?  முடியும் அதனைத்தான் இந்த தொழில்நுட்பம் சாதித்துக் காட்டி இருக்கின்றது. இனி நாம் கடை கடையாக ஏறி இரங்கத்த தேவை இல்லை, பேரம் பேசத் தேவை இல்லை, போலிகளை கண்டு ஏமாறத் தேவை இல்லை, நேர விரையம் இல்லை. இப்போது அனைத்துமே இணையமாயமாகி விட்டது. காலத்திற்கு ஏற்றால் போல் நாமும் நம்மை மாற்றிகொள்வது சிறந்ததே.


  What is the online Shopping ? ஆன்லைன் ஷாப்பிங் என்றால் என்ன ?

  இணையத்தளத்தினை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்வதனையே நாம் Online Shopping என்று அழைக்கின்றோம். எமக்கு எந்த வகையான பொருட்கள் தேவையாக வேண்டுமானாலும் இருக்கலாம் அந்த பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து எம்மை இணைக்கின்றது இந்த Online Shopping.


  இதை யாரு வேண்டுமானாலும் செய்ய முடியும். அதற்கு நமக்கு எந்த வித தகமையோ அல்லது அறிவோ தேவை என்ற அவசியம் இல்லை. இந்த Online Shopping ஆனது E-commerce யின் (இலத்திரனியல் வணிகம்) ஒரு பகுதியே ஆகும்.

  Items required for online shopping - ஆன்லைன் ஷாப்பிங் தேவையான விடயங்கள் 

  01. இணைய இணைப்பு (Internet Connection)
  02. ஸ்மார்ட் போன் / கணணி (Smart Phone/Computer)
  03. வங்கி அட்டை (Bank Card- Debit Card or Credit Card)

  How does online shopping work ? ஆன்லைன் ஷாப்பிங் எப்படி இடம் பெறுகின்றது ? 

  இணையத்தின் ஊடாக குறிப்பிட்ட ஆன்லைன் ஷாப்பிங் வழங்குனர்களின் சேவைத் தளத்தினுள் நுழைந்து நமக்கு தேவையான பொருட்களை வங்கி அட்டைகள் மூலம் கொள்வனவு செய்ய முடியும். குறித்த பொருள் எமது வீட்டிற்கே குறிப்பிட்ட தினத்திற்குள் கொண்டு வந்து தரப்படும்.

  Who is provide online shopping ? ஆன்லைன் ஷாப்பிங் எங்கே செய்ய முடியும் ?

  01. International Online Shopping (ebay, Amazon, Aliexpress, Alibaba and etc....)
  02. Local Online Shopping (Daraz, Takas, Ikman and etc....)
  03. Social Media Shopping (Facebook, Twitter, Instagram)
  04. Instant Message (WhatsApp, Telegram, Viber)
  05. Local Stores (Cargill's, Phone Shops )

  Online Shopping Payment Method ? ஆன்லைன் ஷாப்பிங்கில் எவ்வாறு பணம் செலுத்துவது ?

  Online Shopping யில் பணத்தினை பெரும்பாலும் இலத்திரனியம் மூலமாகவே அனுப்ப கூடியதாக இருக்கும். நீங்கள் International Online Shopping செய்பவர் என்றால் பணத்தினை Deposit Card Credit Card மூலம் செய்யலாம். மேலும் சர்வதேச ரீதியில் இலத்திரனியல் பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் உள்ளன அவற்றின் மூலமும் செய்ய முடியும்.

  இவற்றில் Local Online Shopping செய்கின்றீர்கள் என்றால் வங்கி அட்டைகள், கடனட்டைகள் மூலமும் இலங்கைக்குள் பணபரிவர்தனை செய்யும் நிறுவனங்கள் மூலமும் இந்த பணப்பறிமாற்றத்தில் ஈடு பட முடியும். மேலதிகமாக பொருட்களை பெற்ற பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்நாட்டு ஆன்லைன் ஷாப்பிங்கில் உள்ளது. 

  International Online Payment Method - சர்வதேச ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள்

  01. PayPal
  04. American Express

  Sri Lanka Online Payment Method - இலங்கைக்குள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள்

  02. m-Cash
  06. Genie
  07. Frimi
  08. iPay
  09. UPay

  Is safe Online Shopping ? - ஆன்லைன் ஷாப்பிங் பாதுகாப்பானதா ?

  இதில் அனுகூலமும் பிரதிகூலமும் கலந்த சேவையாகவே பார்க்கப்படுகின்றது. இதில் பலனடைந்தவர்களும் உள்ளனர் அதே நேரம் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். நீங்கள் பாதுகாப்பான சேவையை பயன்படுத்துவது மிகவும் உகந்தது. Online Shopping யில் அதிகமானவை நம்பிக்கை அடிப்படையில் அதிகமாக இயங்குகின்றன.


  சில Online Shopping சேவை வழங்குனர்கள் இதற்கான பல பாதுகாப்பு வசதிகளை வாடிக்கையாளர்களின் நலன் கருதி வழங்குகின்றனர். அதில் Cash Back வசதி மிகவும் நம்பிக்கையானது. இதன் மூலம் எமக்கு பொருள் கிடைகவிட்டலும் அல்லது பொருளில் திருப்தி இல்லாவிட்டாலும் எமக்கு பணத்தினை மீள வழங்கிவிடுவார்கள்.

  Safest Online Shopping Steps - பாதுகாப்பான Online Shopping செய்ய பின்பற்ற வேண்டியவை 

  01. நீங்கள் பிரவேசிக்கும் இணையத்தளம் https அடையாளம் இருக்கின்றதா என்பதை  பரிசோதித்து கொள்ளுங்கள். http என்ற அடையாளம் இருந்தால் அந்த இணையத்தளம் பாதுகாப்பு அற்றவை.

  02. Debit Card, Credit Card தகவல்களை எந்த இணைய சேவையிலும் பதிவு செய்து (Save) செய்து வைக்க வேண்டாம்.

  03. கொள்வனவு செய்யும் பொருள் தரமானவையா என்பது தொடர்பான முன்னைய வாடிக்கயாளர்களின் விமர்சனங்களை பார்த்து பொருளினை கொள்வனவு செய்ய வேண்டும். 

  04.  பொருட்களை கொள்வனவு செய்யும் போது அந்த பொருளின் உண்மையான புகைப்படத்தினை பார்த்து கொள்வனவு செய்வது நன்று.

  05. பொருட்களின் சாதாரண சந்தையில் கிடைக்கும் பொருளின் விலையினையும் Online Market யில் கிடைக்கும் விலையினையும் ஒப்பிட்டு பார்க்கவும்.


  International Online Shopping Providers- சர்வதேச ஆன்லைன் ஷாப்பிங் வழங்குனர்கள்    

  03. Amazon
  04. Ebay 

  Sri Lanka Online Shopping Providers - உள்நாட்டு ஆன்லைன் ஷாப்பிங் வழங்குனர்கள்

  01. Daraz
  04. Takas
  05. Wasi
  06. Ikman
  10. Abans
  11. Singer

  Post a Comment

  Previous Post Next Post