உங்களுக்கு தெரிந்த கணணிகளை பற்றி கூறுங்கள் என்று நம்மிடம் எவராவது கேட்டல் அதற்கு நாம் பதிலளிப்பது PC மற்றும் Laptop என்பதே ஆகும். இவைகளும் கணனிகள் தான் அனால் இவற்றை தாண்டி இன்னும் பல கணனி வகைகள் காணப்படுகின்றன.
அவை பற்றிய ஒரு தொகுப்பாக இந்த பதிப்பில் பார்கலாம். பொதுவாக கணணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
01. திறன் அடிப்படையில் (Capabilities)
02. அளவின் அடிப்படையில் (Size)
03. நோக்கத்தின் அடிப்படையில் (Purpose)
திறன் அடிப்படையில் (Capabilities)
திறன் அடிப்படையில் கணணிகளை நாம் மூன்று வகைப்படுத்த முடியும்.
01. Analog Computer (தொடர் முறை கணனி)
02. Digital Computer (இலக்கமுறை கணனி)
03. Hybrid Computer (கலப்பின கணனி)
Analog Computer (தொடர் முறை கணனி) :
Eg : Thermometer, Speedometer
Analog Computer களின் வகைகள்.
02. Differential Analysers : இது முற்றிலும் வேறுபட்ட கணக்கீடுகளைச் செய்ய உருவாக்கப்பட்டது. வேறுபட்ட கணக்கீடுகளைத் தீர்க்க இது ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது.
04. Electronic Analogue Computer : மின் சமிக்ஞைகள் மின்தேக்கிகள் மற்றும் மின்தடையங்கள் மூலம் உடல் நிகழ்வுகளை உருவகப்படுத்துகின்றன. இங்கே, பகுதிகளின் இயந்திர தொடர்பு நடக்காது. மின் சமிக்ஞையின் மின்னழுத்தம் பொருத்தமான காட்சிகளை உருவாக்குகிறது.
Digital Computer (இலக்கமுறை கணனி) :
Hybrid Computer (கலப்பின கணனி) :
அளவின் அடிப்படையில் (Sizes)
அளவின் அடிப்படையில் நாம் கணணிகளை சில வகையாக பிரித்து பார்க்கலாம்.
01. Micro Computers :
ஒற்றை நுண்செயலி செயல்பாட்டை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இவை ALU(Arithmetic Logic Unit) மற்றும் CU (Control Unit) கொண்டு உருவாக்கப்பட்ட Desktop மற்றும் Laptop வகை கணனிகளாகும்.
02. Mini Computers :
இவை பொதுவான நோக்கத்தினை கொண்ட கணனிகள் ஆகும். இவை நடுத்தர சக்தியினை கொண்டதாகும். அதாவது இவை Micro Computer களை விட அதிகமாகவும், Mainframe கணணிகளை விட குறைவானதாகவும் ஆற்றலினை வெளிப்படுத்தகூடியது.
03. Embedded Computers :
இந்த கணினிகள் செயல்பாடுகளைச் செய்ய எண்ணற்ற மின்னணு சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளன. உணவை சூடாக்க அல்லது சமைக்க மட்டுமே பயன்படும் நுண்ணலைகள், துணி துவைக்க வடிவமைக்கப்பட்ட வாஷிங் மெஷின்கள், பொழுதுபோக்கிற்காகக் குறிப்பிடப்பட்ட தொலைக்காட்சிகள் போன்ற பல்வேறு சாதனங்களில் குறிப்பிட்ட பணியைச் செய்ய அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் வாஷிங் மெஷின் என்பது ஒரு சிறிய கணினியைக் கொண்டுள்ளது, அதில் இயந்திரத்தின் சலவை செயல்முறையை இயக்க அல்லது நிர்வகிக்க அது பொருத்தப்பட்டுள்ளது.
04. Programmable Computer :
குறிப்பிட்ட செயல்பாட்டினை செய்வதற்காக குறித்த கட்டளையினை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட கணணிகளே இவைகளாகும். Personal Digital Assistant (PDA), Mobile Phone, Address Book என்பவற்றை குறிப்பிடலாம்.
05. Laptop :
இந்த கணினிகள் மிகவும் சிறியதாக, எடைகுறைவாகவும் இருப்பதால், பயணத்தின் போது எளிதாக எடுத்துச் செல்ல முடியும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மின் இணைப்பு இல்லாமல் பயன்படுத்தலாம். இந்தக் கணினிகள் LCD (Liquid Crystal Display) திரையால் ஆனவை. இந்த கணினிகள் கல்வி, நிறுவன, வீடுகள் போன்ற பல்வேறு துறைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
06. Desktop / Personal Computer :
இவ்வகை கணணிகளே நாம் அதிகம் பயன்படுத்தும் கணனிகள் ஆகும். இவை பெரும்பாலும் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க பயன்படுவதால் இவை தனிநபர் கணணி எனவும் அழைக்கப்படுகின்றது.
07. Main Frame Computer :
08. Super Computer :
மிக குறுகிய காலத்தில் மிகப் பெரிய எண்களை கணக்கிட இவை பயன்படுத்தப்படுகின்றது. இவை மிக சக்திவாய்ந்த வேகமான கணனியாகும். மேலும் இதனை நிர்மானிப்பதற்கு பாரிய செலவினை செய்ய வேண்டி ஏற்படும்.இவை பாரிய வணிக நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
நோக்கத்தின் அடிப்படையில் (Purpose)
நோக்கத்தின் அடிப்படையில் கணணிகளை நாம் இரண்டு வகையாக பிரித்து பார்க்க முடியும்.
01. விசேட நோக்கக் கணனிகள் (Special Purpose Computer) :
இவ்வகை கணனிகள் குறிப்பிட விசேடமான தேவையினை பூரணப்படுத்த, குறிப்பிட விசேடமான பிரச்சினையை கையாள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றினை குறிப்பிட்ட தேவை தவிர்ந்து பிற எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாது.
02. பொது நோக்கக் கணனிகள் (General Purpose Computer) :
இவ்வகை கணனிகள் பொதுவான நோக்கத்திற்காக உருவாக்கப்படுகின்றவை ஆகும். அதாவது கணக்கிடுவது, கடிதம் எழுதுவது, கணணி விளையாட்டுக்கள், படம் பார்ப்பது போன்ற பொதுவான தேவைகளை பூர்த்திசெய்ய வடிவமைக்கப்பட்டவை ஆகும்.