PUBG: New State reached 10 million Downloads in Google Play Store
ஆன்லைன் பிரபல்யமான விளையாட்டான PUBG தனது புதிய பதிப்பான PUBG: New State என்பதை வெயிட்டு இருந்தது. இதனை வெளியிட்டு சரியாக ஒரு வார காலப்பகுதியில் Google Play Store யில் சுமார் ஒரு கோடி பதிவிறக்கங்களை எட்டியுள்ளது.
நவம்பர் மாதம் 11 ஆம் திகதி Android மற்றும் iOS இது அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இது முன்னைய PUBG Mobile போன்றல்லாமல் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ், புதிய டிராய் வரைபடம் மற்றும் புதிய வாகனங்களைக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இந்த விளையாட்டு தொடங்கப்பட்டு சில மணிநேரத்தில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி நேரிட்டது. விளையாட்டு வீரர்கள் சேர்வதி ஒரு சில மணிநேர தடங்கள்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
என்ன தடங்கல்கள் ஏற்பட்டாலும் பதிவிறக்கங்கள் குறையவில்லை எனவும் Google Play Store யில் சுமார் 10 மில்லியன் பதிவிறக்கங்களை தொட்டுவிட்டதாகவும், ஆப்பிள் ஸ்டோரில் எத்தனை பதிவிறக்கங்களை தொட்டு உள்ளது என்பதனை பற்றி எந்த விளக்கத்தினையும் அதன் வெளியீட்டாளரான Krafton தெரிவிக்கவில்லை.
இருப்பினும் இது தொடர்பில் சில கெட்ட செய்திகளும் வெளிவந்த வண்ணமும் உள்ளன. அதாவது இதனை பதிவிறக்கிய பின்னர் தங்களுடைய Android சாதனம் பல சிக்கல்களை நேர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் ஒரு விளையாட்டு வீரர் குறிப்பிடும் போது தனது Android 12 இயங்குதளத்தை கொண்ட Android சாதனத்தில் PUBG New State பதிப்பினை Install செய்த பின் தனது சாதனம் Boot ஆகவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.
என்னதாக இருந்தாலும் இந்த விளையாட்டானது பாவனையாளர்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இது கணனியில் PUBG இணைய விளையாடும் போது ஏற்படும் அனுபவத்தினை போன்று உள்ளதாக பல பயனாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.