Google being shutdown Match Content ad unit type on 1st March 2022.
Google நிறுவனமானது தனது விளம்பரப்படுத்தல் நிறுவனமான AdSense யில் இருந்து Match Content என்ற விளம்பரப்படுத்தல் யுக்தியை வருகின்ற வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக Google நிறுவனம் குறிப்பிடும் போது குறித்த ஆக்கத்தில் தொடர்பான விளம்பரங்கள் தொடர்பான வாடிக்கயாளர்களின் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் உள்ளடக்க விளம்பரங்களின் பயன்பாடு குறைதல் போன்ற காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக கூறுகின்றது.
Google ஆனது தனது வாடிக்கயாளர்களின் விளம்பரங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்த AdSense சேவை ஆகும். இதன் மூலம் வாடிக்கயாளர்களின் விளம்பரங்கள் Google சம்பந்தப்பட்ட அணைத்து விடயங்களிலும் காண்பிக்கப்படும்.
நீங்கள் google நிறுவனத்தால் அனுமதி வழங்கப்பட்ட இணையத்தலதினுள் பிரவேசிக்கும் போது ஆங்காங்கே விளம்பரப்படுத்தல் தோன்றுவதை அவதானிக்க முடியும். இதன் மூலம் அந்த இணையத்தளத்தினை நாடத்தி செல்பவருக்கு Google நிறுவனம் AdSense மூலம் குறித்த தொகை பணத்தினை வழங்குகின்றது.
இவ்வாறு தனது இணையத்தளத்தில் விளம்பரம்களை பல வடிவில் தோன்ற வைக்க முடியும். அவற்றில் ஒரு வகையே இந்த match Content வடிவம் ஆகும். இது நீங்கள் இதுவரை பதிவிட்ட ஆக்கங்களுடன் பொருந்த கூடிய விளம்பரங்களையும் சேர்த்து காண்பிக்கும் முறை ஆகும்.
இந்த வசதியினையே Google நிறுவனம் நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையானது 2015 ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை பயனாளர்களின் தேவைக்கு ஏற்றல் போல் இலகுவான விளம்பரப்படுத்தல் முறையை கையாண்டு வெற்றியும் கண்டு இருந்தது.
Google நிறுவனம் இது தொடர்பில் குறிப்பிடும் போது நீங்கள் March முன் உங்களது Match Content தொடர்பில் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை என்றால் விளம்பரங்களுக்கு இடையே உள்ள இணைத்தளத்தில் பதிவிடப்பட்ட ஆக்கங்கள் நீக்கப்பட்டு விளம்பரம் மாத்திரம் காண்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
Tags:
Tech News