WhatsApp மூலம் எப்படி பணம் சம்பாதிக்க முடியும். ?

 How to earn money in WhatsApp ?

Affiliate Marketing, Short-Links, y Sence (Clixsence),   How to earn money in WhatsApp ?, WhatsApp மூலம் எப்படி பணம் சம்பாதிக்க முடியும். ?

WhatsApp மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் அதுக்கு பதில் அநேகமானவர்களிடம் இருந்து ஆச்சரியப்படுவதாகவே இருக்கும். இதற்கு பதில் முடியும் தான். அது எப்படி சாத்தியம் என்பது பற்றி இந்த பதிப்பின் ஊடக நாம் பார்க்க முடியும்.


Facebook ஆனது WhatsApp நிறுவனத்தினை வாங்கி இருந்ததினை நாம் அனைவரும் அறிவோம். மிகவும் பிரபல்யமான ஒரு நிறுவனம் WhatsApp இணை வாங்கி அதனை எமக்கு இலவசமா பயன்படுத்த அனுமதிக்கின்றது. மேலும் புதிய புரட்சியையும் கொண்டு வந்தது.

அந்த புரட்சியின் ஒரு வடிவம் WhatsApp Business. இதன் மூலம் WhatsApp பாவனையாளர்கள் தங்களுடைய வணிகத்தினை இலகுவாக இயக்கி கொண்டு செல்ல முடியும். மேலும் இது WhatsApp மூலம் உழைப்பதற்கு பல வழிகளை வகுத்து தந்துள்ளது எனலாம்.

இப்போது நாம் இந்த WhatsApp இணை பயன்படுத்தி எவ்வாறு உழைக்க முடியும் என்பதனை பற்றி பார்க்கலாம்.

01. y Sence (Clixsence) :




இது இணையத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரு முறை ஆகும். இதன் மூலம் நமக்கு அடிக்கடி சில கேள்விகள் கேட்கப்படும் அதற்கு பதில் அளிப்பதன் மூலம் பணம் எமது கணக்கில் வைப்பில் இடப்படும். இவற்றினை நீங்கள் PayPal மூலமாக அல்லது Amazon Gift Card ஆக பெற்றுக்கொள்ள முடியும்.

இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.  இதற்கும் WhatsApp இற்கும் என்ன தொடர்பு என்று . அதாவது இதில் சம்பாதிக்க இன்னுமொரு வழிஉள்ளது அதுதான் Referral Commission.  நீங்கள் இதற்குள் வந்த பின் உங்களுக்கான ஒரு Referral Link வழங்கப்படும். அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு WhatsApp மூலம் பரிமாறலாம்.


இதன் மூலம் உங்கள் Link இணை பயன்படுத்தி யாரெல்லாம் இந்த y Sence யில் சேர்கின்றார்களோ அவர்கள் உழைக்கும் பங்கில் உங்களுக்கு வாழ் நாள் முழுவதும் Commission வந்துகொண்டே இருக்கும்.  

உங்களுடைய இந்த Referral Link இணை பயன்படுத்தி ஒருவர் இணையும் போது 0.3 $ வரை Commission உம் ஒரு referral 5$ உழைக்கும் போதுஉங்களுக்கு Commission ஆக 2$ வழங்கப்படும். 

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீங்கள் ஒரு WhatsApp குழுமத்தை ஆரம்பித்து அதில் நீங்கள் இந்த y-Sence தொடர்பான பயன்,மேம்படுத்தல்கள் பற்றி அடிக்கடி பதிவுகளை போடுவதன் மூலம் அதிகமான referral களை சேர்த்து கொள்ளவும் முடியும், அவர்களை அதிகம் உழைக்க தூண்டவும் முடியும். இதன் மூலம் அதிகமான வருமானத்தை ஈட்ட முடியும்.

02. Short-Links :




இந்த முறையில் பணம் சம்பாதிக்க இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளது. முதலில் Short Links என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்கள் குறிப்பிட இணைய முகவரியினை பார்க்கும் போதுமிக நீளமாக இருக்கும். அதனை நீங்கள் இந்த சேவை வழங்குனர்களின் இணையத்தளத்தில் சுருக்கி எடுத்து கொள்ள முடியும்.

உதாரணமாக : 
https://www.bigbittechtamil.com/2021/09/waht-is-the-encryption.html இது சாதாரண இணையத்தள முகவரி. இதனை நீங்கள் Short Link சேவை வழங்குனரை பயன்படுத்தி http://fumacrom.com/3Iurj அல்லது https://bit.ly/3H2qSYZ என்று நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.

இவ்வாறு பெறப்பட்ட Link இணை நீங்கள் உங்களுடைய WhatsApp மூலம் நண்பர்களுக்கு பகிரும் போது அவர்கள் பார்வை இடும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை பணமா கிடைக்கும்.


உங்களிடம் ஒரு திரைப்படம் சம்பந்தமாக பதிவிடும் WhatsApp குழுமம் இருந்ததால் நீங்கள் அதில் குறித்த திரைப்படம் சம்பதமான தகவல்களை உள்ளடக்கிய இணையத்தள முகாரியினை இவ்வாறு சுருக்கி எடுத்து அனுப்புவதன் மூலம் அந்த குழுமத்தில் உள்ள அனைவரும் பார்வையிடுவார்கள். இதன் மூலம் குறிப்பிட தொகை பணம் உங்களுக்கு கிடைக்கப்படும்.

மேலும் இதில் Referral சேவையும் இருப்பதால் உங்களால் இணையும் நண்பர் அவர் சம்பாதிக்கும் தொகையில் குறிப்பிட்ட தொகையினை உங்களுக்கு இவ்வகை நிறுவனங்கள் Commission ஆக வழங்குகின்றன.

இந்த சேவையினை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இவற்றின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்க முடியும் என்பதனை முழுமையாக அறிய Click Here என்பதனை தெரிவு செய்யவும்.



03. Affiliate Marketing :

Affiliate Marketing,  How to earn money in WhatsApp ?



WhatsApp மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க தூண்டும் ஒரு முறையே இந்த Affiliate Marketing முறைமை ஆகும். இது நாம் வீட்டில் இருந்தே Online மூலம் பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் முறைமை ஆகும்.

இவற்றினை செய்வதற்கு நீங்கள் பொருட்களை கொள்வனவு செய்ய தேவையும் இல்லை உங்களுக்கு கடை ஒன்று இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஒருவரிடம் உள்ள பொருளை அந்த பொருள் தேவைப்படும் வாடிக்கையாளருக்கு பெற்றுகொடுக்க ஒரு தரகராக செயல்படுவதாகும். இதனையே Affiliate Marketing என்று குறிப்பிடுகின்றோம்.

இவ்வாறு பொருட்களை விற்பனையாளரிடம் இருந்து வாடிக்கையாளருக்கு கைமாற்றுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு சிறந்த ஊடகமே WhatsApp ஆகும் . அது எப்படி என்று பார்க்கலாம்.


உதாரணமாக : 
நீங்கள் Affiliate Marketing சேவைகளை வழங்கும் அநேகமான Online Shopping வழங்குனர்களை இணையத்தில் காணலாம். அவற்றில் பிரபல்யமனவர்களே Amazon மற்றும் Aliexpress. இவர்களது Affiliate program யில் சேர்வதன் மூலம் அவர்கள் நமக்கு குறிப்பிட Commission உடன் பொருட்களை விற்பனை செய்வதற்காக எமக்கு வழங்குகின்றனர்.

நாம் அந்த பொருட்களை WhatsApp Group ஒன்றினை ஆரம்பித்து அவற்றில் Affiliate மூலம் வழங்கப்பட்ட பொருட்களை பதிவு செய்யலாம். அந்த குழுமத்தில் உள்ளவர்கள் அந்த பொருட்களை கொள்வனவு செய்யும் போது எமக்கு அவற்றிற்கான Commission வந்து விடும்.

Post a Comment

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2