ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் இரண்டாவது மாதமாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமையினால் Spotify நிறுவனம் தனது சேவையினை Russia வில் இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் Spotify நிறுவனம் ஒரு அறிக்கையில் குறிப்பிடும் போது Russia இராணுவத்தினை பற்றி ஏதேனும் போலியான செய்திகளை பரப்பினால் 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என Russia வினால் இயற்றப்பட்ட புதிய சட்டத்தினை மேற்கோற்காட்டி தனது சேவையினை நிறுத்துவதற்கான முதன்மை காரணமாக குறிப்பிட்டுள்ளது.
Spotify நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்து குறிப்பிடும் போது Spotify நிறுவனமானது சுதந்திரமான நம்பகமான செய்திகள் மற்றும் தகவல்களை வழங்குவதை முக்கியமான குறிக்கோளாக கொண்டுள்ளது. அனால் Russia இயற்றிய புதிய சட்டம் எம்மை சுதந்திரமாக செயல்படுவதை கட்டுப்படுத்துவதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Spotify நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதியும் தற்போது நிலவுகின்ற சூழலையும் கவனத்தில் கொண்டு எங்கள் சேவையினை ரஷ்யாவில் நிறுத்துவதற்கான கடினமான முடிவினை எடுத்துள்ளதாகவும் ஏப்ரல் மாத தொடக்கதிற்குள் எங்களது சேவையினை நிறுத்த முயற்சிப்பதாகவும் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாத தொடக்கத்தில் Kremlin மற்றும் Sputnik யில் உள்ள தனது நிறுவனத்தினை மூடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தனது Streaming சேவையினையும் Subscription சேவையினையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரினை தொடர்ந்து பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யாவினை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கவை.