தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கின்ற இந்த சந்தர்ப்பங்களில் நமக்கு தெரியாமல் நாமலே நமது தரவுகளை பிறருக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றோம்.
இதற்கு பிரதான காரணமாக என்ன என்றே தெரியாத சில Android App களை எமது குறுகிய தேவைகளுக்காக பதிவிறக்கி பயன்படுத்துவதே ஆகும். இதனை முற்றிலும் தவிர்க்க அவ்வாறான App கள் சிலவற்றை பார்க்கலாம்
these Seven Android Apps Will Steal Your Facebook Password And Privacy Data
01. Enjoy Photo Editor :
புகைப்படங்களை Edit செய்யப் பயன்படும் இந்த செயலி பயனாளர்களின் தரவுகளை எடுத்துகொள்வதாக Trend Micro நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிட்டு இருந்தது.
02. Daily Fitness OL :
இவ்வகை உடல் எடையை குறைக்கும் செயலிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அதில் உள்ள நம்பக தன்மையினை பார்க்காமல் பதிவிறக்கி பின்னர் மாட்டிக்கொள்கின்றோம். இந்த செயலியும் இவ்வகை தரவு கசிவில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
03. Photo Gaming Puzzle :
இது ஒரு மொபைல் கேமிங் செயலி ஆகும். இந்த செயலி மூலமும் தரவுகள் திருடப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
04. Panorama Camera :
புகைப்படங்களை Edit செய்யப் பயன்படும் இந்த செயலி பயனாளர்களின் தரவுகளை திருடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
05. Business Meta Manager :
அண்மையில் Facebook அறிமுகப்படுத்தி இருந்த Meta வசதிகள் போன்று தோற்றத்தில் இருக்கும் இந்த செயலியிலும் தகவல் திருடுபோக கூடிய வழிகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
06. Swarm Photo :
இந்த செயலியானது புகைப்படங்களை Edit செய்யவும் அவற்றை பகிர்வதற்கும் உபயோகிக்கப்படுகின்றது. இதன் மூலமும் தரவுகள் கசிகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
07. Crypto mining Fame Your Own Coin :
உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று வரும் Cryptocurrency பற்றி நம்மில் அதிகமானவர்கள் அறிந்து இருப்போம் அவற்றை பயன்படுத்தியும் இருப்போம். அவற்றில் அதிகம் சம்பாதிப்பதாக பொய்யான தகவல்களை வழங்கி நம்மிடம் தரவுகளை திருடும் ஒரு செயலியாக இது காணப்படுகின்றது.