Facebook மற்றும் Instagram மூலம் அதிகளவான பணத்தினை சம்பாதிக்க முடியும் என அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Mark Zuckerberg அறிவித்துள்ளார்.
YouTube, Blogger மூலம் பணம் சம்பாதிப்பதை போன்று Facebook மற்றும் Instagram மூலமாகவும் பணம் சம்பாதிக்க மூடியும். அவ்வாறான சில வழிகாட்டலை Mark Zuckerberg குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடும் போது 2024 ஆம் ஆண்டிற்குள் Facebook மற்றும் Instagram யில் வருவாய் பகிர்வு நிறுத்தப்படும் என கூறினார். இதில் பணம் செலுத்திய Online நிகழ்வுகள் , சந்தாக்கள், பேட்ஜ்கள், புல்லட்டின்கள் உள்ளடங்கும் என்று கூறியுள்ளார்.
மேலதிகமாக Facebook மற்றும் Instagram பாவனையாளர்கள் பணம் சம்பாதிக்க கூடிய 5 வகைகளை குறிப்பிட்டுள்ளார். அவை Meta அணுகலை எளிமையாக்கும் என்று கூறினார்.
How To Earn From Facebook and Instagram ?
01. Interoperable Subscriptions: புதிய சாந்த நடைமுறைய அமுல்படுத்த இருப்பதாகவும் அதன் மூலம் படைப்பாளிகள் வருமானம் ஈட்ட முடியும்.
02. Facebook Stars: நிறுவனம் ஸ்டார்ஸ் எனப்படும் டிப்பிங் அம்சத்தை தகுதியுள்ள அனைத்து படைப்பாளர்களுக்காகவும் தரவுள்ளது. இதன் மூலம் அதிகமான மக்கள் தங்கள் Reels, Live அல்லதுVideos களை பணமாக்க முடியும்.
03. Monetizing Reels: Facebook யில் அதிகமான படைப்பாளிகளுக்கு Reels Play Bonus திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இது, படைப்பாளிகளை Facebook-இல் இருந்து Instagram Reelகளை குறுக்கு இடுகையிடவும், அங்கேயும் பணமாக்கவும் அனுமதிக்கும்.
04. Creator Marketplace: Instagram யில் படைப்பாளர்களைக் கண்டறிந்து பணம் செலுத்தக்கூடிய இடங்களின் தொகுப்பை பரிசோதித்து வருகிறது என்று Meta தலைவர் தெரிவித்துள்ளார். Brandகள் புதிய கூட்டாண்மை வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
05. Digital Collectibles: Instagram யில் படைப்பாளர்களுக்கான NFT ஆதரவை நிறுவனம் விரிவுபடுத்துகிறது. "Instagram மற்றும் Facebook யில் குறுக்கு இடுகையிடும் வகையில், இந்த அம்சத்தை விரைவில் Facebook கொண்டு வருவோம்" என்று மார்க் கூறினார்.