Google Ads என்றால் என்ன ? அதனது பங்களிப்பின் முக்கியத்துவம்
Google Ads என்று அழைக்கப்படுவது Google நிறுவனத்தினால் விளம்பரப்படுத்தல் செயல்பாடுகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு Online Advertising தளம் ஆகும். இதனை முன்னர் Google AdWords என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இங்கு விளம்பரதாரர்கள் தங்களுடைய சுருக்கமான விளம்பரங்கள், சேவைகள், தயாரிப்பு பட்டியல்கள், வீடியோக்கள் மற்றும் இணையத்தளங்களை பணம் செலுத்தி மேம்படுத்தல் நடவடிக்கைகளை மேட்கொள்கின்றனர். இதற்காக இந்த Google Ads சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் Google Search Engine, Google AdSense அனுமதி பெற்ற இணையத்தளங்கள், App கள் மற்றும் வீடியோ வடிவிலும் Google Ads யினால் காட்சிப்படுத்தப்படுகின்றது. இதனால் உலகளாவிய வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரங்களை பார்வையிடுகின்றனர்.
Google Ads யினால் ஒரு Click இற்கு கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இதனை pay-per-click (PPC) என்று அழைக்கின்றனர். இதனால் Google யின் தாய் நிறுவனமான Alphabet Inc இற்கு Google Ads மூலம் 2020 ஆம் ஆண்டு US $168.6 பில்லியன் வருமானமும் 2021 ஆம் ஆண்டு US $257.6 பில்லியன் வருமானமும் ஈட்டிக்கொடுத்தது.
History of Google Ads - வரலாறு
Google நிறுவனம் விளம்பர மேம்படுத்தல் தான் வருமானம் ஈட்ட முடியும் என்ற நோக்கத்திற்காக 2000 ஆம் ஆண்டு Google AdWords என்ற பிரிவினை உருவாக்கியது. விளம்பரதாரர்கள் மாதாந்தம் கட்டணம் செலுத்தி தங்களுடைய விளம்பரங்களை காட்சிப்படுத்தினார். அதனை Google உலகளாவிய ரீதியில் கொண்டு சேர்த்தது.
இதன் வளர்ச்சி காரணமாக சிறு வணிகங்களும் தங்களுடைய விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் Google விரைவாக Google AdWords Self Service Portal இணை அறிமுகப்படுத்தியது. 2005 ஆம் ஆண்டு Jumpstart எனப்படும் பிரச்சார மேலாண்மை சேவையினை தொடங்கியது.
Google AdWords ஆரம்பத்தில் MySQL எனப்படும் தரவு தளத்தில் செயல்பட்டது. கணனி செயல்பாடு அதிகரிக்கப்பட்ட பின்னர் தனது தரவு தளத்தினை Oracle யிற்கு மாற்ற முடிவு செய்தது நிர்வாகம். அனால் முறைமையில் காணப்பட்ட வேகமற்ற தன்மை காரணமாக மீண்டும் MySQL யில் செயல்பட்டது.
இருப்பினும் வணிகத்தின் தேவைகளுக்காக தனது சொந்த தரவு தளத்தினை Google உருவாக்கியது. இதனை RDBMS - Relational Database Management System என்றும் அதனை Google F1 என்றும் குறிப்பிட்டது.
இதில் பயனர் இடைமுகத்தை இலகுவாக்க Spreadsheet Editing, Search Query Report, Conversion Metrics போன்ற வசதிகளை உருவாக்கி வழங்கியது. 2008 யில் Google நிறுவனம் Google Online Marketing Challenge என்பதை உருவாக்கியது. இதன் மூலம் மூன்றாம் நிலை மாணவர்களுக்கான கல்வி பயிட்சியினை வழங்கியது.
இதன் மூலம் 2008யில் 47 நாடுகளில் இருந்து 8000 மாணவர்களும், 2009 யில் 58 நாடுகளில் இருந்து 10000 மாணவர்களும் ,2010 யில் 12000 மாணவர்களும், 2011 யில் 70 நாடுகளில் இருந்து 15000 மாணவர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த சவால் ஒவ்வொரு வருடமும் January-June இடைப்பட்ட காலத்தில் நடைபெறும்.
April 2003 யில் Multiple Users களுக்கு விளம்பரப்படுத்தல் மேம்படுத்தல்களுக்கு உதவ புதிய Campaigns திட்டங்களை Google AdWords அறிவித்தது. இதனால் மேம்படுத்தல் நடவடிக்கைகள் விளம்பரதாரர்களின் மேம்படுத்தல் அறிக்கைகளை உள்ளடக்கி இருந்தது. இதனால் விளம்பரதாரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
2016 July யில் Google நிறுவனம் Showcase Shopping விளம்பர முறையை வடிவமைத்தது. இதன் மூலம் விளம்பரதாரர்கள் தங்களுடைய Keyword இற்கு ஏற்றல் போலான விளம்பர படங்களை தேர்ந்து எடுக்க முடியும்.
October 2017 யில் Google AdWords யின் தினசரி வரவு செலவு திட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. 120% ஆக இருந்த திட்டத்தை 200% ஆக உயர்த்தியது. இந்த அறிவித்தல் அதே நாளில் வெளியிடப்பட்டது. இது விளம்பரதாரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனை Google பின்னர் தெளிவு படுத்தியது . அதாவது இந்த திட்டம் 30 நாட்களுக்கு குறைவான விளம்பரப்படுத்தல் செயல்பாடுகளை செய்பவர்களை மட்டுமே பாதிக்கும் என்றும் 30 நாட்களுக்கு மேல் விளம்பரப்படுத்தல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என்று அறிவித்தது.
27 ஆம் திகதி June 2018 யில் Google AdWords என்று இருந்த பெயரை Google Ads என்று மாற்றியமைத்தது.
Google Ads Functionality - செயல்படும் விதம்
Google Ads ஆனது System யில் காணப்படும் Cookies மற்றும் விளம்பரதாரர்கள் தெரிவு செய்யும் Keywords களை அடிப்படையாக கொண்டு செயல்படும். இந்த செயல்பாடுகளை கொண்டு Google அவர்கள் விரும்பிய பக்கத்தில் விளம்பரங்களை காட்சிப்படுத்துகின்றனர்.
இதன் மூலம் உலகளாவிய ரீதியில் உள்ள Google பயனர்கள் அந்த விளம்பரத்தை Click செய்யும் போது அதற்காக விளம்பரதாரர்கள் பணம் செலுத்துகின்றனர்.
விளம்பர படங்கள் IAB- Interactive Advertising Bureau யின் தரப்படுத்தல் அளவீட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றது.
விளம்பரங்கள் Google யில் மாத்திரம் விளம்பரப்படுத்தப்படாமல் Google யின் கூட்டாளர் அமைப்பான AOL Search, Ask.com, Netscape யிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும் Marketing Agencies மற்றும் Consultant களையும் விளம்பரப்படுத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்துகின்றது.