iPhone உருவான கதை | The Story of iPhone
Apple நிறுவனமானது தனது முதலாவது iPhone இணை 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை புத்தம் புதிய தொழில்நுட்பங்களை தங்களுடைய சாதனத்தில் புகுத்தி பார்க்கும் மக்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சியினை அடைந்துள்ளது.
இந்த பதிவின் ஊடாக நாம்Apple தாயின் முதல் குழந்தை iPhone யின் கதையினை பார்க்கலாம்.
First Generation of iPhone
![]() |
First Generation iPhone |
Steve Jobs 9ஆம் திகதி ஜனவரி 2007ஆம் ஆண்டு Apple நிறுவனத்தின் வருடார்ந்த Macworld conference யில் முதல் iPhone இணை அறிமுகப்படுத்தினார். அவர் முதல் iPhone இணை விளக்குவதற்காக ஒரு மணிநேரத்தினை எடுத்திருந்தார். அதற்கு காரணம் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய பல புதிய தொழில்நுட்பங்கள் முதல் iPhone யில் கொட்டிக்கிடந்ததே ஆகும்.
முதல் iPhone யில் காணப்பட்ட தொழில்நுட்பங்கள் புதுமையானதாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அவற்றை அறிந்து கொள்ள மக்களும் ஆர்வமாக இருந்தனர். அவற்றில் குறிப்பாக Touch Interface மக்கள் மத்தியில் பெரிதும் கதை பொருளாக மாறி இருந்தது. திரைப்படங்களில் மாத்திரமே பார்த்து வந்த ஒரு தொழில்நுட்பம் மக்கள் கைகளிலும் புரளப்போகின்றது என்றால் கேட்கவா வேண்டும் செய்தி உலகம் பூராக காட்டு தீயாய் பரவியது.
First Generation of iPhone இணை Steve Jobs ஜனவரி மாதம் மாநாட்டில் அறிவித்து இருந்தாலும் கூட விற்பனைக்கு வர தாமதாகவே இருந்தது. மக்கள் மத்தியில் இந்த தாமதம் பெரும் ஏமாற்றத்தை தந்து இருந்தது. சில செய்திகளில் இப்படி ஒரு தொலைபேசி இல்லவே இல்லை என்று கூட ஆங்காங்கே செய்திகள் பரவிக்கொண்டு இருந்தது.
ஒரு வழியாக முதல் தலைமுறை iPhone June மாதம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. மக்கள் கடைகளில் வரிசையில் நின்று first generation iPhone இணை வாங்கினார்கள். ஒரு வார காலத்தில் 270,000 iPhone கள் விற்பனையாகியது. இது மாத கடைசியில் 1 மில்லியன் விற்பனையினையையும் எட்டியது.
Second Generation of iPhone - iPhone 3G, iPhone 3GS
![]() |
iPhone 3G |
சரியாக ஒரு வருடம் கழித்து Apple நிறுவனம் தனது இரண்டாவது iPhone பதிப்பினை வெளியிட்டது. இது முதல் iPhone யின் மேம்படுத்தல் ஆக இருந்தது. First Generation of iPhone வந்த காலகட்டத்தில் வெறும் 2G Network காணப்பட்டது. இதனை மேம்படுத்தி 3G Network வசதிகளுடன்Apple நிறுவனம் iPhone 3G என்ற பெயரில் இரண்டாவது iPhone இணை அறிமுகப்படுத்தியது.
இந்த தொலைபேசியின் வருகையுடன் இணையப் பாவனை வேகமாகியது மக்களிடையே மின்னஞ்சல் பாவனை இணைய பக்க அணுகல்களை துரிதப்படுத்தியது. மேலும் இந்த iPhone 3G குறைந்த விலையில் மக்களுக்கு கிடைத்தது.
iPhone 3G யில் GPS மற்றும் 3G வன்பாகங்கள் புதிதாக வந்தாலும் iPhone யில் மிகமுக்கியமா APP STORE இணை Apple நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் மூலம் பிற 3rd Part App களை பதிவிறக்கி பயன்படுத்தக்கூடிய வசதியினை Apple நிறுவனம் உலகத்திற்கு வழங்கி இருந்தது பெரிதும் பேசப்பட்டது. 2018 வரை இந்த App Store யில் 2 மில்லியனிற்கும் மேற்பட்ட APP கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
App Store மூலம் App Developer கள் பலர் உருவாகினர். மில்லியன் கணக்கான iPhone பாவனையாளர்களுக்கு Apps, Games களை உருவாக்கி விற்றனர். இதனால் பாவனையாளர்களின் தொடர்பாடல், விளையாட்டு, வேலை என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது iPhone into pocket computer என்று குறிப்பிடப்பட்டது.
அன்றிலிருந்து iPhone ஒரு புதிய பரிணாம புரட்சியை ஏற்படுத்தியது. Apple தனது iPhone களை பெரிதாகவும் வேகமாகவும் மாற்றியமைத்து கொண்டு இருந்தது. தந்து ஒவ்வொரு iPhone அறிமுகத்திலும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்த வண்ணமே இருந்தது.
The iPhone's story is one of evolution
iPhone யின் பரிணாம வளர்ச்சியினை சுருக்கமாக பார்க்கலாம்.
01. iPhone (2007) - The First iPhone
02. iPhone 3G (2008) - GPS, 3G Data and the Apple Store
03. iPhone 3GS (2009) - The first phone to shoot videos and actually feel fast
04. iPhone 4 (2010) - Retina Display, Front Camera, Face Time, Multi Tasking and Metallic Design
05. iPhone 4S (2011) - Siri! Hey Siri
06. iPhone 5 (2012) - Big Screen, Lightning Connector and Apple Map
07. iPhone 5S (2013) - Touch ID, 64-bit Processor and redesign iOS
08. iPhone 5C (2013) - The most colorful iPhones
09. iPhone 6 & 6 Plus (2014) - Big phones two.
10. iPhone 6S & 6S Plus (2015) - 3D Touch, Live Photos
11. iPhone SE (2016) - Smaller version of iPhone 6s
12. iPhone 7 & 7 Plus (2016) - No headphone jack and 2 camera in plus model.
13. iPhone 8 & 8 Plus (2017) - Wireless charging
14. iPhone X (2017) - Improved hardware with Notch Display
15. iPhone XS & XS MAX (2018) - Large size and best processor
16. iPhone XR (2018) - Budget iPhone with Notch Display
17. iPhone 11, 11PRO, 11 PRO MAX (2019) - Super Retina, Bigger Battery and A13 Bionic Chip
18. iPhone SE (2020) - Budget and Smaller version of iPhone 11 with A13 Bionic Chip
19. iPhone 12mini, 12, 12 PRO, 12 PRO MAX (2020) - Super retina XDR OLED Display and A14 Bionic chip
20. iPhone 13mini , 13, 13 PRO, 13 PRO MAX (2021) - Super retina XDR OLED Display with 120Hz, Dolby Vison and A15 Bionic Chip
21. iPhone SE (2022) - Budget and Smaller version of iPhone 13 with A15 Bionic Chip
- The history of the iPhone is a long and complex one. The iPhone first came to market in 2007, but it wasn't until Steve Jobs reintroduced the iPhone in 2007 that it really took off.
- The iPhone was originally designed by Jon Rubinstein and Tony Fadell. They started working on the iPhone in early 2004, but it wasn't until Jobs came on board that the iPhone really came to life.
- The iPhone first went on sale in 2007, and it was a huge success. The iPhone quickly became the number one selling phone on the market, and it continues to be one of the most popular phones on the market today.
- The iPhone has revolutionized the way people use phones, and it has played a big role in the growth of the mobile phone industry. The iPhone has also helped to promote the