தற்போது வரை பயனர்கள் Teenage பருவத்தினை கடந்துள்ளார்களா என்பதனை சில கேள்விகளை வைத்து தீர்மானிக்கின்றது Instagram. அதனை உறுதிப்படுத்த பல்வேறு அடையாள அட்டைகளின் புகைப்படத்தை பயனர்கள் உள்ளிடுவதாக இதனால் பல போலியான தகவல்கள் உட்செளுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சரி செய்வதற்காக Instagram புதிய முறையை சரிபார்ப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்து இருந்தது. இதன் முதல் கட்டம் America யில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை செய்வதற்காக Face Scanning தொழில்நுட்பத்தினை கொண்டு வயதை சரி பார்க்கும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற Yoti உடன் இணைத்து செயல்படுவதாக Instagram நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை 18 வயதை கடந்து உள்ளதை உறுதிப்படுத்த தங்களுடைய பிறந்த திகதியை மாற்ற முயற்சிக்கும் பயனர்களிடமே புகைப்படத்தினை அனுப்பும் படி Instagram நிறுவனம் பணிப்பினை வழங்குகின்றது.
இவ்வாறு வயதினை அறிந்து கொள்ளும் போது 13-17 வயதிற்கு இடைப்பட்டவர்களது அனுபவத்திற்கு ஏற்ப செயல்பட முடியும். பெரியவர்களுடனான தொடர்பை கட்டுப்படுத்தி தேவையற்ற விளம்பர அணுகல்களை தவிர்க்க முடியும். அந்த வயதுப் பருவத்தினருடனான தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கான விளம்பர பகிர்வை வழங்க முடியும் என Instagram நிறுவனம் தெரிவித்துள்ளது.
வயதினை சரி பார்க்க Instagram நிறுவனம் 2 முறைகளை பரிசோதிக்கின்றது. ஒன்று Social Vouching மற்றயது Artificial Intelligent Estimate ஆகும். இதில் முதல் முறையான Social Vouching முறையில் Instagram யில் உள்ள 3 நபர்களை தெரிவு செய்ய கேட்கும். அப்படி தெரிவு செய்வபவர்கள் வயதினை கொண்டு தீர்மானிக்கும்.
இரண்டாவது முறையான AI Estimate யில் தங்கள Video Selfie இணை பதிவேற்ற வேண்டும். பின்னர் Yoti யின் Machine Learning Technology மூலம் அவர்களது வயதினை மதிப்பிடுகின்றது. வயது சரிபார்க்கப்பட்ட பின்னர் அவர்களது Video Selfie Yoti மற்றும் Meta யில் இருந்து நீக்கப்படும்.