Software உடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பரீட்சயமான ஒரு பெயர் தான் இந்த GitHub. இது ஒரு இணையத்தள சேவையாகும். அதிலும் cloud-base சேவையினை Software Developers களுக்காக வழங்கும் ஒரு இணைய சேவை ஆகும். இதில் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் தங்களுடைய Code களை சேமிக்கவும் அதனை நிர்வகிக்கவும் இது உதவுகின்றது.
GitHub பற்றி புரிந்துகொள்ள நீங்கள் அதனுடைய இரண்டு மையப்புள்ளிகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இது இரண்டையும் சுற்றியே GitHub வடிவமைக்கப்பட்டுள்ளது.
- Version Control
- Git
Version Control - என்றால் என்ன ?
இது Software Developers களுக்கு அவர்கள் உருவாக்கும் Software ஒன்றின் Code களை கண்காணிக்கவும் நிர்வாகிக்கவும் உதவுகின்றது. ஒரு Software யின் வளர்ச்சிக்கு Version Control மிக அவசியம். இதனை இலகுவாக விலக WordPress பற்றி பார்க்கலாம்.
WordPress என்பது ஒரு மிகப்பெரிய திட்டம் ஆகும். இதில் குறிப்பிட்ட Code Base யில் பணிபுரிய நினைக்கும் ஒரு Developer நேரடிய அந்த Code யில் திருத்தத்தை ஏற்படுத்துவது அவருக்கு பாதுகாப்பகவோ அல்லது திறமையானதாகவோ இருக்காது.
அனால் WordPress இணை Version Control மூலம் இணைத்து வேலை செய்யும் போது அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தன்மையினை கொண்டுவரும். இது எப்படி பாதுகாப்பாக அமையும் என்று பார்த்தல் WordPress யில் இருந்து அந்த Code இணை ஒரு நகல் எடுத்து GitHub யில் Version Control யில் சேமித்து பின்னர் அதில் தனது மாற்றங்களை செய்கின்றார். இதனால் பிரதான WordPress யில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படமாட்டாது.
குறிப்பிட மாற்றங்கள் நிறைவடைந்த பின்னர் அந்த செயல்பாடு 100% சரியானதா என பரீட்சித்து விட்டு மீண்டும் WordPress யில் இணைப்பதன் மூலம் பிரதான Code யில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்.
இவை அனைத்தும் Version Control யில் நகல் எடுக்கப்பட்டு இருப்பதனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த Code யில் மாற்றங்கள் செய்யவோ அல்லது பழைய வடிவத்திற்கு மாற்றி அமைக்கவோ இலகுவானதாக இருக்கும்.
Git - என்றால் என்ன ?
Git என்பது குறிப்பிட்ட ஒரு திறந்த வளம் ஆகும் . அதாவது Open Source Version Control ஆகும். இது 2005 ஆம் ஆண்டு Linus Torvalds யினால் உருவாக்கப்பட்டது. Stack Overflow என்ற Developers குழுவின் ஆய்வு அறிக்கையில் 87 % ஆனா Developers Git இணையே அதிகம் பயன்படுத்துவதாக குறிப்பிடுகின்றது.
குறிப்பாக Git என்பது Distributed Version Control அமைப்பாகும். இதனால் ஒவ்வொரு Developers களும் இணைக்கப்பட்டு இருப்பதால் ஒவ்வொருவரினதும் கணனியிலும் Codebase கிடைக்கும். இதனால் அனைவரையும் ஒரு கிளை வடிவில் ஒன்றிணைக்கும். குறித்த Code யில் பல Developers ஒன்றிணைந்து வேலை செய்ய முடியும்.
So, What Is GitHub?
GitHub என்பது ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். இது Cloud இணை அடிப்படையாக கொண்டு Hosting சேவையினை வழங்கும் ஒரு களஞ்சியம் ஆகும் . இது தனி நபர்கள் மற்றும் குழுக்களுடன் Git மற்றும் Version Control இணை இணைத்து பயன்படுத்த உதவுகின்றது.
GitHub இனது User Interface ஆனது மிக எளிதானதாக இருப்பதால் புதிதாக வரும் பயனர்கள் கூட இலகுவாக பயன்படுத்த கூடியதாக இருக்கும். சாதரணமாக ஒருவர் GitHub இல்லாமல் Git இணை பயன்படுத்தல் கூடுதல் Code பற்றிய அறிவு தேவைப்படும்.
இது மிக சிறந்த User Friendly ஆக இருப்பதால் Coding வேலைகள் தவிர்ந்த சாதாரண Book writing வேலைகளை கூட செய்வதற்கு இதனை பயனர்கள் பயன்படுத்துகின்றனர்.
அணைத்து பயனர்களாலும் இலகுவாக Sign Up செய்து இலகுவாக Public Code பகுதியை இலவசமாக பயன்படுத்த முடியும். அதிலும் Open Source Project களை இலவசமாக பயன்படுத்தலாம்.
ஒரு கம்பனி என்ற வகையில் GitHub விற்பனைக்க தனிப்பட்ட தேவைகளுகாக உருவாக்கப்பட்ட Repository களை நிறுவனங்களை நிர்வகிக்கவும் வணிகம் சார்ந்த சேவைகளை வழங்கவும் பணத்திற்காக விற்பனை செய்கின்றது.