இறந்தவர்களின் குரலில் பேசும் Amazon Alexa

Amazon's Alexa speak in a dead relative's voice

Amazon's Alexa  speak  in  a dead relative's  voice

காலம் கொண்டு சென்ற நம் நண்பர்கள், உறவினர்களின் குரல்கள் நம் அறை முழுவதும் கேட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புதிய UPDATE கொண்டுவருகிறது AMAZON நிறுவனம்.


கற்பனை செய்து பாருங்கள் நாம் மிகவும் இழந்து தவிக்கும் நமக்குப் பிடித்தவர்களின் குரல்கள் அல்லது காலஞ்சென்ற நம் நண்பர்கள், உறவினர்களின் குரல்கள்  கேட்டால் எப்படி இருக்கும்? இது நிஜவுலகில் சாத்தியமாகாமல் இருக்கலாம். ஆனால் டெக்னாலஜியால் இது சாத்தியமே!


சமீபத்தில்கூட இறந்தவர்களை Metaverse மூலம் Virtual Reality மூலம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கின்றனர். அந்த வகையில் அமேசான் நிறுவனம் Alexa மூலம் இறந்தவர்களின் குரல்களைக் கொண்டுவருகிறது.

Amazon ன் Gadged ஆனா Alexa Internet வசதியுடன் இயங்கும் ஒரு Smart Speaker. ஆகும். இது நம் கட்டளைகளை உள்வாங்கி அதற்கு இணைய உதவியுடன் பதிலளிக்கும். மேலும் இது Algorithm  செய்யப்பட்ட ஆண் - பெண் இரு குரல்களில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பேசும் திறனைக் கொண்டது. இதைப் பயன்படுத்தி நம் சந்தேகங்களைக் கேட்டறிவது, பாடல்களை Play செய்வது எனப் பல்வேறு செயல்களைச் செய்ய முடியும்.


இப்படிப் பல வசதிகள் கொண்ட இந்த Alexa சாதனத்தை இன்னும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது Amazon நிறுவனம். அதில் குறிப்பாக உயிரிழந்தவர்களின் குரல் போல் Mimic செய்து பேசும் புதிய வசதியைக் கொண்டுவருகிறது. 


இதன் மூலம் நாம் விரும்புவோரின் குரல்களை Alexa வில் உள்ளிட்டுவிட்டால் போதும், அது அவர்களின் குரலில் அனைத்து வார்த்தைகளையும் பேசும் திறனைத் தன்னிச்சையாக வளர்த்துக் கொள்ளும். இதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.1 Comments

  1. For occasion, chopping metallic sheets Portable Washers and Dryers is feasible utilizing shear, which uses shear forces to chop by way of the metallic. There are three choices concerned in kind of|this type of|this type of} chopping – shearing, punching, and blanking. On the opposite hand, fabricators additionally carry out chopping without shear.

    ReplyDelete
Previous Post Next Post