Apple Lockdown Mode
Apple நிறுவன தயாரிப்புகள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், பயனர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக நிறுவனம் வெளியிட்ட Lockdown Mode அம்சத்தை உடைத்து, யாராவது Hack செய்தால், அவர்களுக்கு கோடிக்கணக்கில் வெகுமதிகள் வழங்கப்படும் என Apple அறிவித்துள்ளது.
Apple Lockdown Feature
Apple நிறுவனம் இந்த ஆண்டு WWDC நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக "Lockdown Mode" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் iOS 16 இயங்குதள பதிப்புடன் வருகிறது.
"Pegasus" மற்றும் பிற தீங்கிழைக்கும் மென்பொருளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக இந்த புதிய அம்சம் கொண்டுள்ளது. இச்சூழலில், இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு $2 Million அமெரிக்க டாலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என Apple அறிவித்துள்ளது.
Lockdown பயன்முறை என்பது மிகவும் கடுமையான பாதுகாப்பு முறையாகும். இது iPhone பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. iPhone உடன் பிற Apple தகவல் சாதனங்கள் Hacker களால் குறிவைக்கப்படுகின்றன.
Apple Lockdown Mode-இல் என்னென்ன பாதுகாப்புகள் உள்ளன:
02. இணைய உலாவல்: லாக்டவுன் பயன்முறையிலிருந்து நம்பகமான தளத்தை பயனர் விலக்காத வரை, ஜஸ்ட்-இன்-டைம் (JIT) JavaScript தொகுப்பு போன்ற சில சிக்கலான வலைத் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்.
03. Apple சேவைகள்: பயனர் இதற்கு முன் அழைப்பு அல்லது கோரிக்கையை அனுப்பவில்லை என்றால், FaceTime அழைப்புகள் உள்பட உள்வரும் அழைப்புகள் மற்றும் சேவை கோரிக்கைகள் தடுக்கப்படும்.
04. iPhone பூட்டப்பட்டிருக்கும் போது கணினி அல்லது துணைக்கருவியுடன் Wire வழியிலான இணைப்புகளைத் தடுக்கப்படும்.
05. Lockdown பயன்முறை இயக்கப்பட்டிருக்கும் போது, Profile களை நிறுவ முடியாது.
"Pegasus" ஊழலுக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு Apple இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் NSO குழுமத்தின் Pegasus Spyware யினால் அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் குறிவைக்கப்பட்டனர். இதற்காக Apple நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
தற்போது நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த புதிய Lockdown பயன்முறை பயன்முறை iOS 16 பதிப்பில் கிடைக்கும். Apple Lockdown Mode பயன்முறை Appleன் iPhones, iPads, Mac Computers வேலை செய்யும். இந்த அம்சம் iPhoneல் உள்வரும் இணைப்புகளைத் தடுக்கிறது.
Apple வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "Zero Click" Hacking நுட்பங்களிலிருந்து பாதுகாக்க இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Spyware நிறுவனங்களும் அவசரகாலத்தில் பாதுகாப்பை உடைக்க, பல்வேறு மென்பொருள்களை உருவாக்கி வருகின்றன.