முகம் காட்டாமல் Video Calling வசதி WhatsApp

AVATAR   Video  Calling  Featuers  in  WhatsApp

முகம் காட்டாமல் Video Calling வசதி இணை WhatsApp நிறுவனம் அறிமுகப்படுத்த  உள்ளது.  WhatsApp Video Call யில் Avatar இணை கொண்டுவர இருக்கிறது WhatsApp யின் தாய் நிறுவனமான Meta நிறுவனம். 


சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கிய தகவல் பரிமாற்றக் கருவியாக இருப்பது Emojis,  Stickers தான். வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வேண்டாம். இந்த Emojis களும், Stickers களுமே சில விஷயங்களைப் புரிய வைப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் மனிதர்களின் உணர்வுகளைச் சொற்களைப் பயன்படுத்தாமல் எளிமையாக உணர்த்திவிடுகிறது. இவை சமூக வலைதளத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன.


இந்த Emojis மற்றும்   Stickers  வரிசையில் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது Avatar.  அது  ஒரு உருவத்தை Cartoon வடிவில் Animation யில் காண்பிப்பது. சமீபத்தில்தான் Mark Zuckerberg யின் Meta, 'AVATAR' என்கிற புதிய Update இணை Facebook Messenger மற்றும் Instagram யில் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்பொழுது WhatsApp யிலும் ஒரு புதிய Update இணைகொண்டுவரவுள்ளது Meta.

அந்த Update என்னவென்றால் Video Call இல் முகத்தைக் காட்ட விரும்பாதவர்கள் இந்த Avatar இனை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் Avatar தெரிவினை இயக்கினால் போதும் உங்கள் Phone Camera  மூலம் உங்கள் முகத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற Avatar Animation இணை செய்துவிடும். இதுமட்டுமின்றி உங்கள் முக அசைவையும் அப்படியே பிரதிபலிக்கும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட இருக்கிறது.


இதன் மூலம் Video Call யில் அவ்வப் போது புதிய அப்டேட்களைக் கொண்டு வரும் Google மற்றும் Zoom போன்ற செயலிகளுடன் போட்டியிட இருக்கிறது WhatsApp. Apple செயலியில் Emoji எப்படிச் செயல்படுகிறதோ அதே மாதிரி WhatsApp யிலும் இந்த Avatar கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இதனை WAbetainfo என்ற குழு தெரிவித்துள்ளது. 

இது போன்ற சிறப்பம்சம் ஏற்கெனவே 'WhatsApp Beta' என்கிற Android Version இல் உள்ளது. இன்னும் சில தினங்களில் iOS மற்றும் Android பயனர்களுக்கும் இந்தச் சிறப்பம்சம் கிடைக்கும் என்பதைத் தெரிவித்திருக்கிறது. 


மேலும் WhatsApp Group லிருந்து மற்றவர்களுக்குத் தெரியாமல் வெளியேறும் Option இனை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது Meta. WhatsApp கொண்டுவரப் போகும் இந்தப் புதிய Update கள் அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Post a Comment

Previous Post Next Post