Elon Musk terminating Twitter deal
கடந்த மாதம் Twitter யினை Tesla நிறுவனத்தின் நிறுவனர் Elon Musk சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று Elon Musk தனது Twitter உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
உலகத்தின் முதல் தர பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான Elon Musk சமீபத்தில் பிரபல சமூக வலைத்தளமான Twitter யினை வாங்க ஒப்பந்தம் ஒன்றினை செய்து இருந்தார் இதற்காக வேண்டி சுமார் 3.3 இலட்சம் கோடி ரூபாய் தொகையினை வழங்குவதாக ஒப்பந்தமாகி இருந்தது.
இந்த சூழ்நிலையில் Twitter நிர்வாக தங்களின் Twitter கணக்குகளில் காணப்படுகின்ற BOT கணக்குகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை கோரியிருந்தார். அது தொடர்பில் Twitter வழங்கி இருந்த அறிக்கை சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த Elon Musk திடீரென தனது ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது பங்கு சந்தைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திகள் Tech வல்லுநர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
Elon Musk கேட்ட ஆதாரம் என்ன ? Why did Elon Musk not buy twitter ?
Twitter தலைமை செயல் அதிகாரி ஒப்பந்தத்தில் கூறிய படி BOT கணக்குகள் 5% வீதத்திற்கும் குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க மறுத்து இருந்தார். இதனை நிரூபிக்கும் வரை ஒப்பந்தம் தொடரப்படாது என Elon Musk குறிப்பிட்டு இருந்தார்.
இதில் Elon Musk கணக்குகளில் காணப்படுகின்ற BOT மற்றும் SPAM கணக்குகள் பற்றி விவரங்களை கேட்டிருந்தார். இதனை Twitter தரப்பில் வழங்க மறுத்ததினால் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது நிரந்தரமாக ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.