Googleயின் ஊழியர் பணி நீக்கம் அதிரடி அறிவிப்பு

Google employee layoff action announcement

Google யின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனம் பணியாளர் ககுறைப்பினை செய்ய இருப்பதாக அந்த நிறுவனத்தின் CEO ஆனா Sundar Pichai தெரிவித்துள்ளார். Tesla, Facebook மற்றும் Twitter போன்ற முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதையும் நிறுத்தியுள்ளது.


உலக நாடுகளில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, வட்டி விகிதம் உயர்ந்து வரும் ஏற்கனவே அமெரிக்காவில் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றது. 


GOOGLE யின் அறிவிப்பு

Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனமும், Tesla, Facebook, Twitter போன்ற நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவுகளையே எடுத்துள்ளது. அதாவது சில பிரிவுகளைத் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவதும், ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

 Economic crisis - பொருளாதாரச் சரிவு

வரலாற்று ரீதியாக, தொழில்நுட்பத் துறையின் பொருளாதாரச் சரிவுகளிலிருந்து Google ஒப்பீட்டளவில் எதிர் சக்தியுடன் தான் இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய Internet சேவை நிறுவனமான Google கடைசியாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு பணியமர்த்துவதைச் சில மாதங்களுக்குப் பின்பு தற்காலிகமாக நிறுத்தியது.


OVERSTAFFED - அதிகப்படியான ஊழியர்கள்

ஆனால் அதைத் தொடர்ந்து Google Ads வணிகத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகப்படியான ஊழியர்களைச் சேர்த்துக்கொண்டது. இதேவேளையில் கூகுள் நிறுவனத்தின் Smart Phone, Self Driving Car போன்ற பல திட்டங்கள் இன்னும் லாபகரமாக இல்லாத நிலையில் தற்போது ஊழியர்களின் சுமை அதிகமாகியுள்ளது.


மார்ச் 31 வரை கிட்டத்தட்ட 1,64,000 ஊழியர்களை உலகம் முழுவதும் இருக்கும் அலுவலகத்தில் Google ன் தாய் நிறுவனமான Alphabet பணியமர்த்தியது. சமீபத்திய ஆண்டுகளில் கூகுள் அதிகப்படியான ஊழியர்களைக் Cloud பிரிவு மற்றும் Hardware துறையில் பணியமர்த்தியது.

Microsoft நிறுவனம்

இந்த வார தொடக்கத்தில், Tech உலகின் மற்றொரு ஜாம்பாவானான Microsoft குறைந்த அளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும் Meta Platform அதாவது Facebook யின் தாய் நிறுவனம் புதிதாக ஊழியர்களை நியமிப்பதை நிறுத்தவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.


சுந்தர் பிச்சையின் கடிதம்

இந்நிலையில் Google 2வது காலாண்டில் மட்டும் 10000 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ள நிலையில், இனி வரும் 6 மாதத்தில் Engineering, Technical மற்றும் இதர முக்கியமான பணிகளில் மட்டுமே ஆட்களைப் பணியில் சேர்க்க உள்ளோம். மற்ற பணிகள், பிரிவுகளில் ஆட்சேர்ப்பு வேகத்தைக் குறைக்க உள்ளதாகச் சுந்தர் பிச்சை கூறினார்.

1 Comments

  1. There is purpose to hope that 2023 might be the year for the Show-Me State. However, it is only obtainable as a state-run option by way of the Montana Lottery’s kiosks and website. Montanans are additionally subject to guess limits underneath state regulation, with retail and online sports 카지노 bets not to exceed $250 and $1,000, respectively. Online sports betting launched within the Pelican State in February 2022.

    ReplyDelete
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2