There are many countries that want to use USB TYPE-C CHARGER CONNECTOR. Do we know the reason for that?
ஆரம்பத்த்சில் ANDROID SMART PHONE களுக்கு MICRO CHARGER பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ANDROID SMART PHONE கள் பெரும்பாலும் TYPE C இணையே பயன்படுத்துகின்றது. Apple நிறுவனத்தின் iPhone மொபைல்களில் 30 Pin Doc Connector தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான Lightning Connector பயன்படுத்தத் தொடங்கியது Apple.
மொபைல்களுக்கு யூஎஸ்பி USB TYPE - C CHARGING PORT இணை உருவாக்க பல நாடுகள் விரும்புகிறது.அந்த வரிசையில் தற்பொழுது BARZIL உம் இணைந்துள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்திற்கும் பொதுவாக USB TYPE - C CHARGING PORT கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று SMART PHONE உற்பத்தியாளர்களுக்கும் , மின்னணு சாதன உற்பத்தியாளர்களுக்கும் அறிவுறுத்திருந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் அவர்களது உற்பத்தியாளர்களுக்கு இதனை வலியுறுத்திருந்தது.
WIRLESS REGULATOR உடைய சாதனங்களுக்கு USB TYPE - C CHARGING இணை பயன்படுத்த BRAZILபரிந்துரை செய்திருக்கிறது. இந்தப் பரிந்துரை பற்றி மக்களும், நிறுவனங்களும் தங்களது கருத்தை AUGUST 26 வரை பகிர்ந்து கொள்ளலாம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.இதுபோன்ற நாடுகள் USB TYPE - C CHARGING இணை பயன்படுத்துவதற்கு காரணம் மின் கழிவு சிக்கலுக்கு தீர்வு காணுவதற்குதான் என்று தெரிவிக்கிறது.இதன் மூலம் மக்கள் புதிய மின் சாதனங்கள் வாங்கும் பொழுது அவர்களது பழைய சாதனத்தின் சார்ஜரைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது.
ஆனால், இதில் பெரும் சிக்கலில் சிக்கயிருப்பது APPLE நிறுவனம் தான். LIGHTNING CONNECTOR இணை பயன்படுத்துகின்றது. USB TYPE - C CONNECTOR ஐ போலவே, LIGHTNING CONNECTOR களும் பல்வேறு வசதிகளைத் தன்னுள்ளே பெற்றிருந்தது. ஸ்லிம்மாக இருப்பதும், வேகமாக மின்சாரத்தைக் கடத்தவும் அது பயன்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் லேப்டாப்களில் எல்லாம் USB TYPE - C CONNECTOR தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால், மொபைல்களுக்கு மட்டும் இன்னமும் LIGHTNING CONNECTOR தான் பயன்படுத்தி வருகிறது .
அதற்கான பிரத்யேகக் காரணங்களும் இல்லாமல் இல்லை. வாடிக்கையாளர்கள் ஐஃபோனைப் பயன்படுத்துவது என்பது பல காலமாகவே ஒரு STATUS ஆக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் இருக்கும் எல்லா வசதிகளையும் கடந்து சமூகத்தில் ஒரு மரியாதையை என்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. அப்படியெனில், அதற்கென பிரத்யேகமாக சில விஷயங்களை உருவாக்க வேண்டும்.
உண்மையில், USB TYPE - C CONNECTOR பயன்படுத்தலாம் என முதலில் முடிவெடுத்த நிறுவனம் APPLE தான். ஆனால், அப்போது இந்த தொழில்நுட்பம் அவ்வளவு பரவலாக வரவில்லை. அதனாலேயே , பிரதேயகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே LIGHTNING CONNECTOR ஐ தேர்வு செய்தது APPLE நிறுவனம்.
அதே போல், தற்போது USB TYPE - C CONNECTOR களுக்கு மாற வேண்டும் என்றால், ஏற்கெனவே லைட்னிங் கனெக்டர்களுக்கான உதிரிபாக விற்பனையும் பாதிப்படையும். இவையெல்லாவற்றையும் ஆப்பிள் நிறுவனம் கருத்தில் கொண்டு என்ன செய்யப் போகிறது என்பதைத்தான் ஒட்டுமொத்த TECH உலகமும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.