MALWARE என்றால் என்ன ?
Malware என்பது Malicious Software (தீங்கிழைக்கும் மென்பொருள்) என்ற சொற்றொடரின் சுருக்கம் ஆகும். இத்தகைய மென்பொருட்கள் குறித்த நபரின் அனுமதி இன்றி அவரது கணணியிற்குள் அல்லது தொலைபேசியினுள் சென்று தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் எடுக்கின்றது. இதனை பெரும்பாலும் Hackers கள் பயன்படுத்துகின்றனர்.
இதனை Malcode (Malicious Programming Code) இணை பயன்படுத்தி உருவாக்குகின்றனர். இதனை Malware’s Payload என்று குறிப்பிடுகின்றனர். Malware களின் செயல்பாட்டினை தடுப்பதற்காகவே Anti Malware கள் காணப்படுகின்றன. Anti Virus மற்றும் Anti Spyware கள் Anti Malware களாக செயல்படுகின்றன.
Malware யின் வகைகள்
1. Ransomware :
இத்தகைய Malware கள் தகவல்களை Encrypt செய்கின்றன. இதனால் குறித்த நபரால் தனது தரவுகளை அனுகல முடியாமல் போகின்றது. இந்த தரவுகளை மீள Decrypt செய்து கொடுக்க Hackers கள் பணத்தினை கப்பமாக கோருகின்றனர்.
Ex : 2022 ஆம் ஆண்டு Baltimore என்ற நகரத்தில் ஏற்பட்ட Robin hood என்ற Ransomware தாக்குதலால் அந்த நகரத்திற்கு 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு Atlanta நகரத்தில் இடம்பெற்ற Ransomware தாக்குதலால் அந்த நகரத்திற்கும் 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது.
2. Fileless Malware :
இவை கணனியில் எந்த ஒரு பாதிப்பினையும் உடனே ஏற்படுத்தாது. இவை கணனியின் இயக்க முறைமையில் (Operating System) காணப்படும் கோப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதனால் Anti Virus மென்பொருட்களால் கூட தாக்குதலை கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த வகை Malware கள் வெற்றிகரமானதாக காணப்படுகின்றன.
Ex : Astaroth என்ற ஒரு Fileless Malware ஆகும். இவை இணையத்தில் பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய இயங்குதள மென்பொருட்களில் Astaroth Malware இணை இணைத்து இலவசமாக வழங்குகின்றனர். சட்டவிரோதமாக இயங்குதள மென்பொருட்களை பதிவிறக்கி பயன்படுத்துபவர்கள் Antaroth போன்ற Fileless Malwarகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்.
3. Spyware :
இவை பயனர்களின் அனுமதி இன்றி அவர்களது செயல்பாடுகளை திருடுகின்றது. இதில் பயனர்களின் கடவுச்சொல், கட்டண தகவல்களை மற்றும் ஏனைய தரவுகளை பெற்றுக்கொண்டு மோசடி நடவடிக்கைகளுக்கு உதவுகின்றது. இத்தகைய Spyware கள் கணனியில் மாத்திரமின்ற Smart Phone களில் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
Ex : Dark Hotel எனப்படும் Spyware இணை பயன்படுத்தி Hotel Wi-Fi இணை பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் அரச தலைவர்களின் முக்கிய தகவல்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
4. Adware :
இந்த Malware வகையானது பயனர்களின் இணையம் தழுவிய கொள்வனவு செயல்பாடுகளை கண்காணிக்கும் செயல்பாட்டினை செய்கின்றது. இது கணனியில் எந்த ஒரு பாதிப்பினை ஏற்படுத்தாது விடினும் பயனர்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்று அதனை விளம்பரதாரர்களிடம் வழங்குகின்றது. இதனால் பயனர்கள் என்ன வாங்கினார்கள், எவ்வளவு பணம் செலுத்தினார்கள், எங்கு பயணம் செய்தார்கள் போன்ற தகவல்களை எந்த அனுமதியும் இன்றி பெற்றுகொல்கின்றது.
Ex : 2017 ஆம் ஆண்டு Fireball எனப்படும் Adware ஆனது உலகளாவிய ரீதியில் 250 மில்லியன் கணணி மற்றும் சாதனங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி இருந்தது. இவை குறிப்பிட்ட சாதனங்களில் தங்களுடைய தேடுபொறியினை (Search Engine) நிறுவி அதனை பயன்படுத்தும் நபர்களின் தரவுகளை பெற்றுக்கொண்டது.
5. Trojan :
இத்தகைய Malware கள் தன்னை விரும்பிய வடிவில் மாற்றிக்கொண்டு மென்பொருட்களில் ஒழிந்து கொள்கின்றன. இத்தகைய மென்பொருட்களை பயனர்கள் பதிவிறக்கும் போது அது தன்னுடைய வேலையினை அவரது சாதனத்தில் காட்டத்தொடங்கி விடுகின்றது. Trojan Malware ஆனது Games, Apps, Software மற்றும் மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டு காணப்படும்.
Ex : Emote எனப்படுகின்ற Trojan ஆனது ஒரு அதி நவீன வங்கி Trojan ஆகும். இது தற்போதும் நடைமுறையில் உள்ளது. இது அமெரிக்க நாட்டில் மாநிலம், உள்ளூர், குடியேற்றங்கள் போற்றவற்றில் சுமார் 1 மில்லியன் டாலர் வரை சேதத்தினை ஏற்படுத்தி உள்ளது. TrickBot எனப்படும் ஒரு Trojan Malware உம் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ள ஒரு வங்கி Trojan ஆங்கும்.
6. Worms :
இவை இயங்குதள மென்பொருளினை குறிவைத்து தங்களுடைய தொழிற்பாட்டினை ஆரம்பிக்கின்றது. இவை Flash Drive அல்லது மென்பொருட்களின் மூலம் கணணிற்குள் வந்து Ransomware தொழிற்படுவதற்கு உதவி புரிகின்றது.
Ex : ஈரானின் அணுசக்தி திட்டத்தினை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைத்து Stuxnet என்ற Worm Malware இணை இணை உருவாக்கியது. இது ஒரு Flash Drive மூலம் பரப்பப்பட்டது.
7. Virus :
இது ஒரு செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண்டு குறித்த மேன்பொருளுடனே இருக்கும். இவை செயல்பட ஆரம்பித்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியமான தரவுகளை எடுப்பதற்கும் மற்றும் DDoS, Ransomware செயல்பாட்டிற்கும் உதவி புரிகின்றது. இத்தகைய Malware பதிவிரக்கப்பட்டலும் இவை செயல்படுவதற்கு இதனால் பாதிக்கப்பட்ட மென்பொருள் செயல்படுவது அவசியம். இல்லை என்றால் இந்த Virus Malware செயல்படாது.
8. Rootkits :
இது ஒரு மென்பொருளாகும். இதனை பயன்படுத்தி Hackers பயனர்களின் கணனியினை Remote Control மூலம் இயக்குகின்றனர். இத்தகைய Rootkit மென்பொருட்கள் Key loggers களின் செயல்பாட்டினை மறைக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது.
Ex : Zacinlo எனப்படும் Rootkit Malware ஆனது போலியான VPN மென்பொருட்கள் போன்று தரவிறக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது, இவை கண்ணனுக்கு தெரியாத Search Engine களில் சென்று அதில் தோண்றும் விளம்பரங்களை Click செய்கின்றது. இதனால் விளம்பர மோசடிகள் ஏற்படுகின்றன.
9. Keyloggers :
Keyloggers என்பது பயனர்களின் செயல் பாட்டினை கண்காணிக்கும் ஒரு வகை Spyware ஆகும். Keylogger ஆனது சில நல்ல வகையான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது வணிகங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், பெட்ரோல் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
இருப்பினும் தீங்கிழைக்கும் செயல்பாட்டில் கடவுச்சொல், வங்கித் தகவல்கள் போன்றன திருடப்படுகின்றன. இவை இணையத்தளத்தில் காணப்படும் உத்தியோகபூர்வமற்ற பதிவிரக்கங்களால் உட்புகுத்தப்படுகின்றன.
Ex : Olympic Vision எனப்படும் Keylogger இனைப் பயன்படுத்தி அமெரிக்கா, மத்தியகிழக்கு மற்றும் ஆசிய நாட்டு வணிகர்களை குறிவைத்து Business Email Compromise எனப்படும் தாக்குதல் நடாத்தப்பட்டது.
10. Bots/Botnets :
Bots எனப்படுவது ஒரு தன்னியங்கி மென்பொருள் ஆகும். இவை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும் சில தீங்கிழைக்கும் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவை Self-Propagating Malware ஆக செயல்படுகின்றது. இவ்வகை Bots Malware கள் Remote Control மூலம் பல்வேறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
Ex : Echobot நன்கு எனப்படும் Bots Malware பலவிதமான loT சாதனங்களை தாக்கி 50 இற்கு மேற்பட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. Mirai loT என்ற Bots Malware 800,000-2.5 மில்லியன் கணனிவரை தாக்கி இருந்தது.
11. Mobile Malware :
இவை தொலைபேசி சாதனங்களை குறிவைத்து நாடாத்தப்படுகின்ற தாக்குதல்களுக்கு மூல காரணமாக அமைகின்றது. விளம்பர மோசடிகள், Ransomware மற்றும் Trojan போன்ற Malware களை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. இவை இயங்குதள மென்பொருளில் ஒரு பகுதியாகவே இணைந்து இருக்கும்.
Ex : Triada Mobile Malware ஒரு Rooting மென்பொருளில் உள்ள Trojan வகை ஆகும். இதனை பயன்படுத்தி Root செய்யும் போது அந்த தொலைபேசியின் கட்டுப்பாடு குறித்த Hacker வாசம் ஆகிவிடும்.
12. Wiper Malware :
போது அல்லது தனியார் நிறுவனங்களின் கணணிகளை முழுமையாக இயங்க விடாமல் தடுப்பதற்காக விசேசமாக வடிவமைக்கப்பட்ட ஒரு Malware மென்பொருளாகும். இந்த வகை Malware மென்பொருட்கள் தனது செயல்பாடு முடிவடைந்ததும் தான் இருந்ததற்கான தடயங்களை அளித்து விடும்.
Ex : ஜனவரி 15, 2022 ஆம் ஆண்டு WhisperGate எனப்படும் Wiper Malware உக்ரேனிய போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் அரசாங்கத்திற்கு சொந்தமான பல இணையங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.
13. Crimeware :
இவை தனிப்பட்ட அடையாளங்கள், பணம் மற்றும் தனியுரிமை தகவல்களை திருடுவது போன்ற குற்றங்களை செய்யப் பயன்படும் ஒரு பொதுவான மென்பொருள் ஆகும். இதில் Virus, Trojan, Worms, Spyware, Adware போன்றவை உள்ளடங்கும்.
Ex : 14th December,2004 ஆம் ஆண்டு வெளியான “Putting an End to Account-Hijacking Identity Theft” என்ற FDIC யினால் எழுதப்பட்ட கட்டுரையில் David Jevans என்பவரால் இந்த பெயர் உருவாக்கப்பட்டது.
Tags:
Tech Article